சினிமாவுக்கு வந்து 38 வருஷமாகியும் ரஜினியுடன் நடிக்காத ஒரே நடிகை..!! அதற்கு என்ன காரணம் தெரியுமா...? இப்படி ஒரு சான்ஸ எப்படி மிஸ் பண்ணாங்க...!!

சினிமாவுக்கு வந்து 38 வருஷமாகியும் ரஜினியுடன் நடிக்காத ஒரே நடிகை..!! அதற்கு என்ன காரணம் தெரியுமா…? இப்படி ஒரு சான்ஸ எப்படி மிஸ் பண்ணாங்க…!!

Cinema News

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 165க்கும்  மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்பத்தில் நாடகத் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் நடிப்பை விட இவரின் ஸ்டைலுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

இவர் சினிமாத்துறைக்கு 1983ம் ஆண்டு வந்தார். ஆரம்பத்திலிருந்து இன்று வரை இவர் பல நடிகைகளுடன் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இவர் பல நடிகைகளுடன் நடித்திருந்தாலும் ஒரு நாயகியுடன் மட்டும் நடிக்கவில்லை. இந்த விஷயம் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ரஜினியை தெரியாதவர்களே இல்லை எனலாம். இவர் ஆரம்பத்தில்  ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்தார். கிட்டத்தட்ட 40 வருடங்களாக இன்று வரை நம்பர் 1 இடத்தில இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. இவருக்கு வயதானாலும் கூட இன்று வரை இவரின் திரைப்படம் வெளிவரும் போது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.

இந்த அளவு முக்கியமான நடிகராக இருக்கும் ரஜினியுடன் நடிக்காத ஒரு நடிகை ஊர்வசிதான். இவர் தென்னிந்திய சினிமாவில் எப்பேர்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய சுறுசுறுப்பான நடிப்பால்  ரசிகர்களை கவரும் வகையில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதில் கில்லாடிதான் நடிகை ஊர்வசி. இவர் பெரும்பாலும் ஊர்வசி நடிக்கும் கதாபாத்திரங்கள் காமெடி கலந்திருப்பதால் ரசிகர்கள் அதிகம் விரும்பினார்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் காமெடி காட்சிகளில் பின்னி பெடல்  எடுப்பார். அப்படிப்பட்ட இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடக்கவில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. ஒருவேளை நடிகர் ரஜினி மற்றும் நடிகை ஊர்வசி கூட்டணியில் ஒரு திரைப்படம் வெளிவந்திருந்தால் கண்டிப்பாக அது மறக்க முடியாத திரைப்படமாக அமைந்திருக்கும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *