மாதம் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து உணவளித்து வரும் பிரபல நடிகை...!! யார் தெரியுமா...? இவரது நல்ல மனதை பாராட்டி வரும் ரசிகர்கள்...!!

மாதம் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து உணவளித்து வரும் பிரபல நடிகை…!! யார் தெரியுமா…? இவரது நல்ல மனதை பாராட்டி வரும் ரசிகர்கள்…!!

Cinema News

பொதுவாக சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதிகமானோர் தங்களால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார்கள். அதிலும் கொ ரோ னா காலத்திற்குப் பிறகு நடிகர், நடிகைகள் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பல நடிகர் மற்றும் நடிகைகளை கூறலாம். அந்த வரிசையில் தற்போது இருக்கும் ஒருவர் தான் நடிகை தன்யா ஹோப். தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்தத் திரைப்படம் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் இதனைத் தொடர்ந்து தாராள பிரபு படத்தில் நடித்து இன்னும் அதிக அளவில் பிரபலமானார் நடிகை தன்யா ஹோப். இதனைத் தொடர்ந்து வல்லான், கோல்மால், குலசாமி போன்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் நடிகை தன்யா ஹோப்.

மேலும் இவர் அதிகமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய அனைத்து மொழிப் படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகையாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை தன்யா நடிப்பதையும் தா ண் டி ஒரு சில சமூக சேவைகளையும் சில வருடங்களாகவே ஒரு குழுவுடன் இணைந்து செய்து வருகிறார். அதுவும் முக்கியமாக லா க் டவுன்  நேரத்தில் வேலையில்லாமல், இருந்து வந்த கிராம மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து இருக்கிறார்.

மேலும் நடிகை தன்யா ஹோப் ரோட்டில் இருக்கும் ஏதாவது சில மக்களை பார்த்து உதவி செய்யாமல் ஒரு தனி கிராமத்தையே தேர்ந்தெடுத்து பார்த்து உதவி செய்து வருகிறார். இதற்காக மாதம் ஒரு கிராமத்தை தேர்வு  செய்து அந்த கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு,உணவளித்து வருகிறார்களாம். இதன் மூலம் சராசரியாக 200 நபர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறாராம். நடிகை தன்யா பிரபல தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இப்படி ஒரு சேவையை செய்து வருவதற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *