தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சாவித்திரி. நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர். சாவித்திாியின் இயற்பெயர் சரசவாணி தேவி என்பதே ஆகும். சிஸ்டா பூர்ணையா சாஸ்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். மேலும் இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாது இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கினார். 1952ம் ஆண்டு வெளிவந்த கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழிப் படங்களில் சேர்த்து 320க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற பல மாபெரும் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது பிரபல நடிகை சாவித்ரியை மக்கள் சற்று ம ற ந்து விட்ட நிலையில், அவரது வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த “நடிகையர் திலகம் ” என்ற படம் அவரது திலகம் மீண்டும் மலர வைத்தது.
இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷிற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இவருக்கு நடிகர் ஜெமினி கணேசனுடன் 1952ம் ஆண்டு திருமணம் நடந்தது. மேலும் இவர்களுக்கு விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் சதீஷ் குமார் கணேசன் என மகள் மற்றும் மகன் உள்ளார்கள். விஜய சாமுண்டீஸ்வரி, சாவித்ரியின் ம ர ண த் திற்கு பிறகு அவரது பெரியம்மா வீட்டில் தான் வளர்ந்தாராம். மேலும், இவருக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனராம். அதில் முத்த மகன் அபினவ் இருக்கின்றனராம். 2014 ஆம் ஆண்டு வெளியான “ராமானுஜம் ” என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
இதோ அவரின் மகளின் புகைப்படம்…