கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் விக்ரம். இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்தனர். இப்படம் 400 கோடி வசூல் செய்தது. எ தி ர்பா ர்த்ததை விட இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு சூர்யா ஏற்று நடித்த இந்த கதாபாத்திரமும் ஒரு கா ரணம் என்றே சொல்லலாம்.
அப்படி படத்தின் வெற்றிக்கு முக்கியமான கதாபாத்திரமாக அமைந்த ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது சூர்யா கி டையாதாம். நடிகர் விக்ரமை தான் லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்தாராம். ஆனால் விக்ரம் அந்த கதாபாத்திரத்தின் நீளம் கு றைவாக இருந்ததால் நடிக்க ம று த்து விட்டாராம். அதன் பின் சூர்யாவிடம் பேசி நடிக்க ஒத்துக் கொள்ள வைத்தாராம்.
அதேபோல படத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே வந்தாலும் மக்கள் மனதில் பதியும் விதத்தில் அமைந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா சம்பளம் எதுவும் வாங்க வி ல் லையாம். இந்த விஷயத்தை கேள்வி பட்ட ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.