விஜய் டிவியின் ஹிட் ஷோ மீண்டும்…!! ஆனால் இப்படி ஒரு புதிய மாற்றத்துடனா…? வெளியான அசத்தல் அறிவிப்பு…!! உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

Cinema News videos

விஜய் டிவியில் ஆரம்பத்திலிருந்து பல ரியாலிட்டி ஷோக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திரைப்படங்களை கலாய்க்கும் வகையில் ஸ்பூப் ஷோவாக வந்த நிகழ்ச்சிதான் லொள்ளு சபா.  இந்த நிகழ்ச்சி 2003ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டது. அந்த சமயத்தில் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து பல பேர் சினிமாவிற்கு சென்றுள்ளனர். அந்த வகையில் நடிகர் சந்தானம் மிகப் பெரிய காமெடி நடிகராகவும், அதன் பின் ஹீரோவாகவும் வளம் வந்தார். அதேபோல சுவாமிநாதன் இவரும் வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு இருக்கும் தீ வி ர ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை திரும்பவும் எப்போது எ டுப்பீங்க என்று கேட்டு வந்தனர். அவர்களுக்கு தற்போது பதில் கிடைத்து விட்டது. நெட்பிலிக்ஸ் நிறுவனம் லொள்ளு சபா நடிகர்களை ஒன்றாக இணைத்து அந்த ஷோவை வேறொரு பெயரில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. தற்போது பிரேக்கிங் பேட் சீரிஸை இந்த லொள்ளு சபா குழுவினர் ஸ்பூஃப் செய்துள்ளதை நெட்பிளிக்ஸ் நாளை (20.01.2023) வெளியிடுகிறது.

இந்நிலையில் இந்த டீம் மீண்டும் தமிழ் ரசிகர்களை சிரிக்க வைக்க வருவதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஒரு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. Breaking Bad-ன் spoof தான் அது. அதற்கு joking bad என்று பெயர் வைத்து இருக்கின்றனர். அந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோ வெளியாகி தற்போது வை ர லாகிக் கொண்டிருக்கிறது. இந்த ப்ரமோவைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *