தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் இதற்கு முன்னால் வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்னும் கதாப்பாத்திரத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் க வ னத்தை ஈ ர் த்தவர். இது தவிர ஒரு சில திரைப்படங்களில் க வ ர் ச் சியாகவும் நடித்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொணடதன் மூலமே இன்னும் அதிக அளவில் மிகவும் பிரபலமானார்.
மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்கனவே ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்த நிலையில் அவர் வெளியேறிய பின் ரேஷ்மா இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்தார். முதலில் மக்கள் ஏற்றுக் கொள்ளவி ல்லை என்றாலும் போகப் போக இவரின் நடிப்பு மக்களுக்கு பிடித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரம் கொண்ட வி ல் லி யாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெகு விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அந்த புத்தம் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எ தி ர்பார்க்கப்படுகிறது. இதனால் இவர் பாக்கியலட்சுமி தொடரில் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது வி ல கிக் கொள்வாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எ ழு ந் துள்ளது. என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.