பாவ்னி ரெட்டி ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றுகிறார். 2021 இல், அவர் ரியாலிட்டி தொடரான பிக் பாஸ் 5 தமிழ் இல் ஒரு போட்டியாளராக இருந்தார் மற்றும் 2வது ரன்னர் அப் ஆனார். அவர் தமிழ் மொழி தொலைக்காட்சி தொடரான சின்ன தம்பியில் நாயகியாக நடித்ததற்காக அறியப்பட்டவர். 2012 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான லாகின் மூலம் சீமா என்ற காதாபாத்திரத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். ரெட்டை வால் குருவியில் கிராமத்து பெண்மணியாக நடிக்கும் முன் பாவனி தனது 21வது வயதில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் சின்ன தம்பி நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார் மற்றும் அவரது நடிப்பிற்காக பாராட்டைப் பெற்றார்.
அவர் டபுள் ட்ரபிள், வஜ்ரம், மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் ஜூலை காற்றில் போன்ற படங்களில் நடித்தார். சென்னை டைம்ஸ் – 2019 தொலைக்காட்சியில் மிகவும் விரும்பப்படும் 20 பெண்களின் பட்டியலில் பவானி இடம்பெற்றார். 2021 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 5இல் ஒரு போட்டியாளராக இருந்து பின்னர் 2வது ரன்னர் அப் ஆனார். நடிகர் அஜித் குமார் மற்றும் மஞ்சு வாரியர் நடித்த துணிவு திரைப்படத்தில் பாவனி தோன்றினார். அவர் படத்தில் முக்கிய பெண் வேடங்களில் ஒருவராக நடித்தார். அவரது நடிப்பிற்காக மிகவும் பாராட்டப்பட்டார்.
பாசமலர் என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் தோன்றிய பிறகு 2016 இல் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாருடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். காதலர் தினத்தை குறிக்கும் வகையில் பிப்ரவரி 14, அன்று அவர் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் பிரதீப் திடீரென த ற் கொ லை செய்துகொண்டு, ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இ ற ந்து கி ட ந் தார். பிக் பாஸ் சீசன் 5ல் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தவர் அமீர். இவர் பிக் பாஸ் வீட்டிலேயே இவரது காதலை பாவனியிடம் தெரிவித்தார். இது ஸ்க்ரிப்ட்ட் என பலரும் தெரிவித்தனர். ஆனால் இது உண்மை தான். முதலில் பாவனி அமீர் தன்னை விட சிறியவர் என்பதால் காதலிக்க மறுத்தார்.
பிக் பாஸ் ஜோடி 2 நிகழ்ச்சி மூலம் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆனது. இந்நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியின் டைட்டிலை இருவரும் தட்டி சென்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் ஒருபுறம் வாழ்த்து கூற, ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் திருமணத்திற்கும் தயாராகி உள்ளனர். இதனை பாவனி கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் வெளிப்படுத்தினார். இருவரும் தற்போது பட வாய்ப்பினை ஏற்று நடித்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.