தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ராதா ரவி அவர்கள். இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் எம்.ஆர். ராதா ஆவார். பிரபல நடிகைகளான ராதிகா, நிரோஷா இவர்கள் இவரின் தங்கைகள் ஆவார்கள். இவரை பற்றி கேட்டதுமே முதலில் நமக்கு நியாபகம் வருபது வில்லனாக இவர் நடித்து அசத்திய படங்கள் தான். தன் வாழ்க்கைப் பயணத்தினை நாடக நடிகராக தொடங்கினார். ஒன்பதாம் வகுப்பில் ஜூலியஸ் சீசராக நடித்தார். கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து நாடகத்தில் நடித்தார்.
முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து இப்போது 40 வருடங்களாக சினிமாவில் கலக்கி வருகிறார். 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரைவில் தென்னிந்திய சினிமா நடிகர் சங்க தலைவராக இருந்தவர். டி ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் முதன்முதலாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். வைதேகி காத்திருந்தாள், உயர்ந்த உள்ளம், சின்னத்தம்பி, பூவேலி, உழைப்பாளி, குறு சிஷ்யன் என தமிழ் திரையுலகில் பல வேடங்களில் தன் நடிப்பினை வெளிபடுத்தினார்.
வீரன் வேலுத்தம்பி என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாமலை திரைப்படத்தில் வில்லனாக இவர் நடித்த நடிப்பு இன்று வரை மறக்க முடியாது. அதுவும் அந்தப்படத்தில் இவர் பேசிய “கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா இருக்கும்” என்கிற பஞ்ச் டைலாக் இன்றும் மக்களால் பேசப்பட்டு வருகிறது. அரசியலிலும் பெரிய ஈடுபாடு காட்டி வருபவர், அவ்வப்போது சில மேடைகளில் பேசிய விஷயங்கள் மூலம் ச ர் ச் சையிலும் சி க் கி வருகிறார்.
அத்தோடு வெள்ளை சட்டை, வேஷ்டி மற்றும் பேன்ட்டில் அதிகம் வலம் வந்த ராதா ரவி அண்மையில் கோட்-சூட் அணிந்து ஒரு போட்டோ ஷுட் எடுத்துள்ளார். எனினும் அதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அட நம்ம ராதா ரவியா என ஆச்சரியப்பட்டு வந்தார்கள். அவரின் இந்த புதிய லுக் மற்றும் போட்டோ ஷுட்டிற்கு காரணம் அவரது சொந்த பேத்தி தானாம். அத்தோடு அவரது பேத்தி பவித்ரா சதீஷ் சினிமா துறையில் முன்னணி நடிகை மற்றும் நடிகர்களுக்கு உடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறாராம் எனக் கூறப்படுகின்றது.
View this post on Instagram