கடந்த 1953-ம் ஆண்டு வெளியான புட்டிலு என்கிற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஜமுனா. கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாச ராவ்- கவுசல்யா தேவி ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் ஜமுனா. ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலாவில் வளர்ந்தார். நடிகை சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார். அதனால் சாவித்திரி, ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார். இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.
பின்னர் தெலுங்கில் ராமராவ், அக்கினேனி என அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜமுனா. இவர் மிஸ்ஸியம்மா, தங்கமலை ரகசியம், நிச்சய தாம்பூலம், குழந்தையும் தெய்வமும், நல்ல தீர்ப்பு, மருத நாட்டு வீரன், தாய் மகளுக்கு கட்டிய தாலி, மனிதன் மாறவில்லை, தூங்காதே தம்பி தூங்காதே, பூமி கல்யாணம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் ஜமுனா. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என இந்தியா முழுவதும் சுமார் 190 படங்களில் நடித்து அசத்தியவர் ஜமுனா. இவர் பிலிம்பேர் உள்பட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். இவர் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் சிறந்து விளங்கி உள்ளார். 1980களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஜமுனா, 1989ம் ஆண்டு ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பிறகு, அவர் அரசியலில் இருந்து வி லகினாலும்1990 களில் பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், தற்போது வயது மூப்பு காரணமாக ம ர ண மடைந்துள்ள நடிகை ஜமுனாவின் ம றைவு, தெலுங்கு திரையுலகிற்கு பே ரி ழ ப்பாக பார்க்கப்படுகிறது. திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அவரது ம றை வுக்கு இ ர ங்கல் தெரிவித்து வருகின்றனர்.