இந்திய சினிமாவில் தன்னுடைய தனித்துவமான ஸ்டைலான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். அதன் பிறகு தன் இயல்பான நடிப்பால் படிப்படியாக முன்னேறி இன்றும் தமிழ் சினிமாவிலும் மக்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு திகழ்ந்து கொண்டிருக்கிறார். 70 வயதை தொட்டும் அதே ஸ்டைல் மாறாமல் ஜொலித்து ஜெயிலர் படத்தில் நடித்தும் வருகிறார். மேலும், கருப்பு – வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முதல் நடிகர் என்ற சாதனைக்கு சொந்தகாரரும் இவர்தான்.
நடிகர் ஒய்ஜி மகேந்திரன் புதிதாக ஷார்ப் புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன்மூலம் சாருகேசி என்கிற படத்தையும் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்து, தன் மனைவி குறித்து எமோஷனலாக பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது : “என் மனைவி லதாவை எனக்கு அறிமுகப்படுத்தியது ஒய் ஜி மகேந்திரன் தான். அதற்காக நான் அவருக்கு கடமை பட்டிருக்கிறேன். எங்களுக்கு கல்யாணம் நடக்க அவர் தான் முக்கிய காரணம். இப்போது எனக்கு வயது 73-ஐ கடந்தாலும், நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமே என்னுடையை மனைவி லதா தான். நான் கண்டெக்டராக இருக்கும் போது சில கெ ட்ட சினேகிதர்கள் சகவாசத்தால், பல கெ ட்ட ப ழக்கங்கள் எல்லாம் எனக்கு இருந்தது.
கண்டெக்டராக இருக்கும்போதே தினமும் ரெண்டு வேளையும் அசைவம் தான் சாப்பிடுவேன். அதுவும் மட்டன் தான் பிடிக்கும். தினமும் தண்ணி அ டிப்பேன். ஒரு நாளைக்கு சிகரெட் எத்தனை பாக்கெட் பிடிப்பேன்னு எனக்கே தெரியாது. கண்டெக்டராக இருக்கும் போதே இப்படி இருந்தேனா, இதன் பின் நடிகனாகி பணம், பெயர், புகழ் இவை அனைத்தும் வந்ததும்எப்படி இருப்பேன்னு யோசிச்சி பாருங்க. காலையிலேயே ஆட்டுக்கால் பாயா, ஆப்பம், சிக்கன் 65 போன்றவை தான் சாப்பிடுவேன். அப்போதெல்லாம் சைவம் சாப்பிடுபவர்களையெல்லாம் பார்த்தால் எனக்கு பாவமா இருக்கும்.
ச ரக்கு, சி கரெட், அ சைவ உணவு இதெல்லாம் மோ சமான காம்பினேஷன். இதனை அளவுக்கு மீ றி பல வருடங்களாக சாப்பிட்டவர்கள் யாரும், எனக்கு தெரிந்தவரை 60 வயசு வரைக்கும் ஆரோக்கியமாக வாழ்ந்ததே கிடையாது. அதற்குள்ளே போயிட்டாங்க. அப்படி 60 வயசுக்கு மேல வாழ்ந்தாலும், நடமாட முடியாமல், படுத்த படுக்கையா தான் இருக்காங்க. இதற்கு நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம், ஆனா நான் என் வாயால் சொல்ல விரும்பவி ல்லை. அந்த மாதிரி இருந்த என்னை அன்பாலே மாற்றியவர் என் மனைவி லதா. இந்த மாதிரி கெ ட் ட பழக்கங்களை யார் சொன்னாலும் அவங்களால விட முடியாது.
அவ்ளோ அன்பா என்னை மாற்றி, சரியான மருத்துவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை சொல்ல வைத்து, என்னை ஒரு பக்குவத்துக்கும், நல்ல பழக்கத்துக்கும், ஒரு ஒழுக்கத்துக்கும் கொண்டு வந்து என்ன மாத்துனதுஎன் மனைவி லதா தான். லதா என்னுடைய பழைய படங்கள் பார்த்தாலே உங்களுக்கு தெரியும், கல்யாணத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன், கல்யாணத்துக்கு பின் எப்படி இருந்தேன் என்று. இப்படி ஒருவரை எனது மனைவியாக்கியதற்கும் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். ரஜினியின் இந்த பேச்சைக் கேட்டு அவரது மனைவி லதா, கண் க ல ங்கினார்.