தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடிய பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் ஸ்ருத்திகா. இவர் அதிகமான படங்கள் நடிக்கவி ல் லை என்றாலும் கூட சில படங்களே அவருக்கு கொஞ்சம் ரீச் கொடுத்தது. இவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். குறிப்பாக சூர்யா நடித்த ’ஸ்ரீ’ மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான நள தமயந்தி. ஸ்ரீ, ஆல்பம், திக்குதே போன்ற சில படங்களில் நடித்துள்ளார். ஒரு மலையாள படமும் நடித்திருக்கிறார்.
வெள்ளித்திரையில் இவர் தோன்றியிருந்தாலும் கூட அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது என்னவோ குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி மூலம் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு குக்காக இல்லாமல் கோ மா ளி போலவே மிகவும் ஜாலியாக இருந்தார். அப்படி இருந்தாலும் கூட இந்த சீசனின் டைட்டில் வின்னர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்ருதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பல ஜாலியான பு கைப்படங்களை வெளியிடுவார் என்பதும், அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இவருக்கு நேற்று திருமண நாள் வந்துள்ளது. எனவே திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பு கைப்படத்தை ஷேர் செய்து கணவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிகாவா இது, அடையாளமே தெரியலையே என்று வியந்து பார்த்து அவருக்கு வாழ்த்தும் கூறி வருகின்றனர். இந்த பதிவில் ஸ்ருதிகா கூறியபோது, ‘இத்தனை வருடங்களில் என்னுள் சிறந்ததை மட்டுமே வெளிக்கொண்டு வந்த அவருக்கு, என்னை போலவே என்னை நேசித்த அவருக்கு நான் நன்றி செலுத்திக் கொள்கிறேன்.
நான் செய்யும் எல்லாவற்றிலும் எனக்கு நம்பிக்கை தந்து, எனது முதுகெலும்பாக இருந்து, எனக்கு ஆதரவாக இருக்கும் உண்மையான தூண் தான் எனது கணவர். இந்த நாளில் கடவுள் எனக்கு இந்த மனிதரை தந்தது குறித்து நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன். அவர் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி உண்மையாகவே என்னுடன் வாழ்ந்து வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்களிடம் ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.
View this post on Instagram