கடந்த 2016 ஆம் ஆண்டு, வெளியான ‘கிடாரி பூசாரி மகுடி’ என்கிற தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நக்ஷத்திரா. இந்த படத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்காக எ திர்பார்த்தும், பலன் இ ல் லாமல் போகவே, சீ ரியலின் பக்கம் சாய்ந்தார். தமிழ் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருவது தான் சீரியல்கள். அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் பல்வேறு விதமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்னும் சீரியலில் வெண்ணிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் தான் நக்ஷத்திரா.
இந்த சீரியலில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதில் இவரது சிறந்த நடிப்பிற்காகவே இல்லத்தரசிகளுக்கு இவரை மிகவும் பிடித்து விட்டது. அது மட்டுமன்றி இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியது. அந்த அளவிற்கு இவரின் முதல் சீரியலிலேயே மிக முக்கிய இடத்தை மக்கள் மனதில் பிடித்து விட்டார். இந்த சீரியல் மிக வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இதனைத் தொடர்ந்து, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வள்ளி திருமணம்’ என்கிற சீரியலிலும் நடித்து வந்தார்.
இதில் மிகவும் வித்தியாசமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி சீரியலில் சாதுவான பெண்ணாக இவர் நடித்து வந்தார். ஆனால், தற்போது நடித்து வரும் வள்ளி திருமணம் சீரியலில் மிகவும் துணிச்சலான பெண் வேடத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முதல் தனது காதலர் விஷ்வா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர் க ர் ப்பமாக உள்ளதால் சில நாட்கள் மற்ற எந்த சீரியலிலும் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நக்ஷத்திரா தரப்பில் இருந்து, எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவி ல் லை என்றாலும் இவருடைய தோழிகள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து இவரை, இவரது வீட்டிற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து, தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று ரசிகர்களுக்கு இரண்டு குட் நியூஸை கூறியிருக்கின்றார். அதில் தான் புதிதாக யூடியூப் சேனல் தொடங்கியுள்ளதாகவும் அதன் வழியாக தான் அம்மாவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது தான் மூன்று மாசம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் நக்ஷ்சத்திராவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.