தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க நடிகர் சூர்யா பிரபல வெற்றிப்பட இயக்குனர் சிறுத்தை சிவா உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் தலைப்பிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
10 மொழிகளில் 3டி தொழில் நுட்பத்துடன் வெளியாக உள்ள படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை திஷா பாட்னி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஹ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஏற்கனவே இப்படம் 50% சதவீதத்திற்கும் மேல் படப்பிடிப்பு நடந்து விட்ட நிலையில் அடுத்ததாக வரலாற்று காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.
சூர்யா இது போன்ற கதைகளில் நடிக்கும் படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாக இருந்து வந்துள்ளன. அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு திரைப்படம் இவருக்கு முதல் 100 கோடியை பெற்று தந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல இந்த படத்திற்கான எ திர் பார்ப்பும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. சூர்யா 42 திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்த நிலையில் மீதி படத்தின் படப்பிடிப்பு வி றுவி றுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யார் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறித்து தகவல்களை தெரிகிறது அதன்படி பார்க்கையில் கடந்த ஆண்டு வெளிவந்த சீதாராமம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமான மிருணாள் தாகூர் தான் இந்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. இவர் இந்தப் படத்தில் இணைந்தது சூர்யா 42 படத்திற்கு இன்னும் பிளஸ் ஆக அமைந்துள்ளது என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த சமயத்தில் சூர்யாவுடன் இவர் ஜோடியாக நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச் சியை கொடுத்துள்ளது.