விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுமுகங்கள் மற்றும் நமக்கு தெரிந்த சில பிரபலங்களைக் கொண்டு தொடங்கப்பட்டது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மிகவும் சுவாரசியமாக ஓடிக் கொண்டுள்ளது. அதற்குக் காரணம் குடும்பங்கள் கொண்டாடப்படும் சீரியலில் இதுவும் ஒன்று என்பதால். வீனஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கும் இந்த தொடர் 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக TRP குறையாமல் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்ணன்-தம்பிகள் கொண்ட கூட்டு குடும்பம் பற்றிய கதையைத் தான் இந்த தொடர் பேசுகிறது. இப்போது இந்த வார புரொமோவில் புதிய கார் ஒன்றினை வாங்கி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அதைக் கொண்டாடுகிறார்கள். இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் மூத்த அண்ணியாக நடித்து வருபவர் தான் சுஜிதா. இவர் பல மொழிகளில் சீரியல்கள் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்தார் சுஜிதா. ஆனால் அதில் அந்த தொடர் முடிந்து விட்டது. தற்போது தெலுங்கில் கீதாஞ்சலி என்ற புதிய தொடரில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம். இந்த தொடர் தமிழில் ஒளிபரப்பான செவ்வந்தி என்ற தொடரின் ரீமேக் என கூறப்படுகிறது. அதனைப் போல வெள்ளித்திரையில் சுஜிதா முதன் முதலில் நடித்தது பாக்யராஜின் தாவணி கனவுகள் படத்தில் தான்.
View this post on Instagram