ப்ரியா அட்லி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு...!! என்ன குழந்தை தெரியுமா? வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்...!!

ப்ரியா அட்லி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு…!! என்ன குழந்தை தெரியுமா? வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

General News

சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்தவர் தான் அட்லி. இவர் இதனைத் தொடர்ந்து நயன்தாரா, ஆர்யா,  ஜெய் மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கியிருந்தார். இப்படங்களும் வேற லெவலில் வெற்றி பெற்றது.

தற்போது ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். அட்லிக்கும், சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ப்ரியாவிற்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2014ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 8 ஆண்டுகளுக்கு பின் க ர்ப்பமான ப்ரியாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்வு நடந்தது.

இதில் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த தம்பதியருக்கு இன்று (ஜனவரி 31ம் திகதி) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது பற்றி ப்ரியா வெளியிட்ட பதிவானது வை ர லா கி வருகின்றது. அதாவது எல்லோரும் சொல்வது சரி தான். இப்படி ஒரு உணர்வு உலகில் இல்லை. எங்களது ஆண் குழந்தை இங்கே. பெற்றோராக அற்புதமான புதிய சாகசம் இன்று துவங்குகிறது. நன்றியுடன். மகிழ்ச்சியாக வாழ்வின் பாக்கியமாக கருதுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *