அட தளபதி 67ல் நடிக்கும் குழந்தை யார் தெரியுமா...? இந்த பிரபல காமெடி நடிகரின் குழந்தை தானாம்...?

அட தளபதி 67ல் நடிக்கும் குழந்தை யார் தெரியுமா…? இந்த பிரபல காமெடி நடிகரின் குழந்தை தானாம்…?

Cinema News Image News

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் சமீபத்தில் வாரிசு படம் வெளியாகி வெற்றிகரமாக ஓ டிக்கொண்டிருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் ‘தளபதி 67’ இல் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து அப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டுகளும் அ திகாரப் பூர்வமாக வெளியிடப்பட்ட வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் இதில் நீண்ட கால இ டைவெளியின் பின் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

அது மட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து மன்சூர் அலிகான், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் மேத்யூ, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க இருக்கின்றது. மேலும் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதற்காக விஜய், திரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் காஷ்மீரில் தங்கி முகாமிட்டுள்ளனர். அத்தோடு இரண்டு மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளார் அப்படத்தினுடைய இயக்குநர் லோகேஷ். இவ்வாறாக தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் நேற்று தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ வெளியிடப்பட்டது. அதில் விஜய்யுடன் இருந்த குழந்தை, பிரபல நடிகர் ஒருவரின் மகள் என்கிற தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது காதலில் சொதப்புவது எப்படி, டிக் டிக் டிக், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான ஒருவர் தான் நடிகர் அர்ஜுனன். அவரின் மகள் இயல் என்பவர் தான் தற்போது தளபதி 67 இல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த சந்தோஷமாக தகவலை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நடிகர் அர்ஜுனனுக்கு ரசிகர்களிடமிருந்தும், பல பிரபலங்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் நடிகர் அர்ஜுனனுக்கு இளன், இயல் என்கிற இரட்டை குழந்தைகள் உள்ளார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அதில் அர்ஜுனனின் மகன் இளன் நயன்தாராவின் ஓ2, கவின் நடிப்பில் வெளியாக உள்ள டாடா போன்ற படங்களில் நடித்து அசத்திருக்கின்றார். அதேபோல் இயல் அருண்விஜய் உடன் ‘அச்சம் என்பது இல்லையே’, விஜய்யின் ‘தளபதி 67’ போன்ற பல படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *