Cooku with Comali என்பது விஜய் தொலைக்காட்சியின் தமிழ் ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சி ஆகும். Cooku with Comali மூன்று சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன்ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இது 28 ஜனவரி அன்று தொடங்கப்பட்டது. ரக்ஷன் மீண்டும் நான்காவது முறையாக தொகுப்பாளராக வந்துள்ளார். அதேபோல் செஃப் தாமோதரன் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நான்காவது முறையாக ஜட்ஜாக உள்ளனர்.
Andreanne Nouyrigat, காளையன், கிஷோர் ராஜ்குமார், மைம் கோபி, ராஜ் ஐயப்பா, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின் ஷ்ரிங்கர், விசித்ரா, VJ விஷால் ஆகியோர் இந்த சீசனில் உள்ள குக்குகள் ஆவர். இந்த சீசனில் கோமாளிகளாக மணிமேகலை, புகழ், சுனிதா கோகோய், ஜி.பி.முத்து, ரவீனா தாஹா, குரைஷி, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளெஸி, சில்மிஷம் சிவா, புலி தங்கதுரை, மற்றும் ஓட்டேரி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி செட்டில் ஓட்டேரி சிவா குடித்து விட்டு கலாட்டா செய்ததால், விஜய் டிவி ஒரு முடிவு எடுத்து இவரை வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இவர் அதனால் தான் வெளியேற்றப்பட்டாரா அல்லது தங்கதுரை, மணிமேகலை வந்ததால் ஆள் போதும் என்று வெளியேற்றப்பட்டாரா என்பது தெரியவில்லை. ரசிகர்கள் இவருக்கு ஒரு புறம் சாதகமாகவும் ஒரு புறம் பாதகமாகவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.