பாரதி கண்ணம்மா என்பது 2019 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி தொலைக்காட்சித் தொடராகும், இது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. பிரவீன் பென்னட் இயக்கியுள்ளார். இது 25 பிப்ரவரி 2019 அன்று திரையிடப்பட்டது. இந்தத் தொடரில் இரண்டு சீசன்கள் உள்ளன. இந்தத் தொடரில் உள்ள 1வது சீசன் கருத்தமுத்து என்ற மலையாள தொடரின் ரீமேக் ஆகும். மேலும் இதில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்தார். இவர் விலகிய பிறகு இவருக்கு பதிலாக வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்தார். பாரதியாக அருண் பிரசாத் நடித்தார்.
தொடர் 4 ஆண்டுகள் ஒளிபரப்பாகி இன்று நிறைவடைகிறது. இன்று இந்த சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோட் என்பதால் நேற்று இந்த தொடரின் இரண்டாவது சீசன் ப்ரமோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த தொடர் 6 பிப்ரவரியில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். அதே தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் ஒரு சிறிய மாற்றம் அடைந்து பாரதியாக சிப்பு சூர்யன் நடிக்கிறார். கணம்மாவாக வினுஷா தேவியே நடிக்கிறார். துணை வேடங்களில் ரூபா ஸ்ரீ மற்றும் தீபா சங்கர்ஆகியோர் நடிக்கின்றனர். பாரதியின் அம்மாவாக முதலில் நடித்தவரே நடிக்கிறார். இதோ அந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ.