Cooku with Comali மூன்று சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இது 28 ஜனவரி அன்று தொடங்கப்பட்டது. ரக்ஷன் மீண்டும் நான்காவது முறையாக தொகுப்பாளராக வந்துள்ளார். அதேபோல் செஃப் தாமோதரன் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நான்காவது முறையாக ஜட்ஜாக உள்ளனர்.இந்த சீசனில் கோமாளிகளாக மணிமேகலை, புகழ், சுனிதா கோகோய், ஜி.பி.முத்து, ரவீனா தாஹா, குரைஷி, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளெஸி, சில்மிஷம் சிவா, புலி தங்கதுரை, மற்றும் ஓட்டேரி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி செட்டில் ஓட்டேரி சிவா குடித்து விட்டு கலாட்டா செய்ததால், விஜய் டிவி ஒரு முடிவு எடுத்து இவரை வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஷிவாங்கிக்கு கோமாளியாக மணிமேகலை வந்துள்ளதாக ப்ரமோ வெளியானது. இதன் மூலம் ஷிவாங்கி வெளியேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை அளித்து வருகின்றனர். ஏனென்றால் ஷிவாங்கிக்கு ஓரளவுக்கு தான் சமைக்க தெரியும்.
மணிமேகலைக்கு அந்த அளவுக்கு ஒன்றும் தெரியாது. எனவே இந்த வார எலிமினேஷன் ஷிவாங்கி தான் என கூறி வருகின்றனர். ஒருவேளை ஷிவாங்கி எலிமினேட் ஆனால் அவரை மீண்டும் கோமாளியாக பார்க்கலாம். எனவே இவர் யாருக்கு கோமாளியாக செல்கிறாரோ அவர் ஜெயிக்க வாய்ப்புங்கள் அதிகமாக உள்ளது. ஏனென்றால் இவர் ஓரளவுக்கு சமைக்க கற்று கொண்டிருப்பதாக குக் வித் கோமாளி சீசன் 4 லான்ச்சில் இவர் சமைக்கும் வீடியோவை வெளியிட்டனர். இதோ அந்த பிரமோ வீடியோ.