பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரியலில் இருந்து வி ல கப் போகின்றாரா இந்த முக்கிய கதாபாத்திரம்…!! என்ன காரணம் தெரியுமா…? இவரி ல் லா மல் எப்படி…? வெளியான ப்ரோமோவால் கு ழ ப் பத்தில் ரசிகர்கள்…!!

Cinema News Image News

விஜய் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், முக்கிய கதாப்பாத்திரத்தில் அதாவது மூர்த்தியின் மனைவியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். இவர் தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் தெலுங்கில், ஜெமினி டிவியில் புதிதாக தொடங்க உள்ள கீதாஞ்சலி என்ற சீரியலில் நடித்துள்ளார். இதற்கான ப்ரோமோ அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. அதைப் பார்த்த பலரும் இந்த புரோமோ-வை எங்கேயோ பார்த்திருப்பது போல் உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தனர். இந்தத் தொடர் தமிழில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி தொடரின் ரீமேக் ஆகும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் சீரியல் என்பதால், சுஜிதாவுக்கு இதில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரபலங்கள் பலரும், நடிகை சுஜிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது சீரியலில் தனத்தின் கதாபாத்திரத்திற்கு அதிக வேலை இல்லாததால் ஒருவேளை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பதால் இவர் வேறு சீரியலுக்கு தாவி விட்டாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சுஜிதா இந்த சீரியலில் நீடிப்பாரா? இல்லையா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *