தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சூர்யா அவர்கள் புதிய தொழில் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வை ர லாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ச மீ பத்தில் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா, ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதே போல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி வி ளை வு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
தற்போது சூர்யா பாலாஇயக்கத்தில் ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே, பாலா இயக்கத்தில் சூர்யா நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்திருந்தார். அந்த இரண்டு படங்களுமே சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதன் பின் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா– பாலா இருவரும் இணைந்து படத்தில் பணியாற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்து இருக்கிறது.
இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு வணங்கான் என்று பெயர் கூட வைக்கப்பட்டு விட்டது. இதை அடுத்து சூர்யா வெற்றிமாறனின் கூட்டணியில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். பின் இவர் சூர்யா 42 என்ற பெயரிடாத படத்தில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார்.
சமீபத்தில் கூட டெல்லியில் நடந்த 68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சூரரை போற்று படத்திற்காக சூர்யா பெற்று இருக்கிறார். மொத்தம் 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது சூரரைப் போற்று திரைப்படம். இதனால் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள்.
படத்தில் நடிப்பதோடு மட்டுமின்றி நடிகர் சூர்யா விமான நிலையம் மூலம் அவர்கள் பல கோடி அளவில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. சூர்யா அவர்கள் நடிகர் என்பதை தாண்டி, ஒரு சிறந்த தொழில் அதிபராகவும் விளங்கி வருகிறார் என்ற செய்தி தெரிய வந்துள்ளது.
மும்பையில் ஒரு முக்கிய தொழிலில் 200 கோடி ரூபாய் தொகையை நடிகர் சூர்யா முதலீடு செய்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது அடுத்த ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சென்னை, மதுரை, திருச்சி, மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய ஊர்களில் உள்ள விமான நிலையத்தில் பார்க்கிங் காண்ட்ராக்ட்டை நடிகர் சூர்யா தான் எடுத்திருக்கிறார். இதன் மூலம் சூர்யாவிற்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.