விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரே ஒரு நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா தான். அதிலும் கோபிநாத் என்ற ஒரே தொகுப்பாளர் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக கொண்டு செல்கிறார். ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமான தலைப்புகளும், அதைப் பற்றி இவர் விவாதிக்கும் ஸ்டைலும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
காமெடி, கலாட்டா, சுவாரஸ்ய விஷயங்கள் என ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் எல்லாம் கலந்த கலவையாக நிகழ்ச்சியை நடத்துவார். கோபிநாத்திற்கு திருமணம் முடித்து வெண்பா என்ற மகள் மட்டும் இருக்கிறார். அவருக்கு Guitar வாசிப்பது மிகவும் பிடிக்குமாம். அப்படி ஒருமுறை வாசிக்கும் போது எடுத்த ஒரு வீடியோவை கோபிநாத் அவர்கள் எப்போதோ இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது அதிக அளவில் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
View this post on Instagram