டி.பி. கஜேந்திரனை க ழட்டி விட்டு கணக்கு வாத்தியாருடன் ஓ டிய காதலி...!! பலருக்கும் க ண் ணீ ர் வர வைத்த அவரின் சுயசரிதை இதோ..!

டி.பி. கஜேந்திரனை க ழட்டி விட்டு கணக்கு வாத்தியாருடன் ஓ டிய காதலி…!! பலருக்கும் க ண் ணீ ர் வர வைத்த அவரின் சுயசரிதை இதோ..!

General News

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நகைச்சுவை நடிகருமாக இருந்து வந்தவர் டி.பி.கஜேந்திரன். அந்த வகையில் இவர் தமிழில் ‘பாண்டி நாட்டு தங்கம், எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி பேரும் புகழும் பெற்றவர். அத்தோடு ஏராளமான தமிழ் படங்களில் காமெடி நடிகனாகவும்  குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கின்றார். இவ்வாறு சினிமாவில் பல வழிகளிலும் தனது பேரையும், புகழையும் சம்பாதித்து கொடி கட்டி பரந்த டி.பி.கஜேந்திரன் உடல்நலக் கு றை வால் உ யி ரி ழந்த விஷயம் ஒட்டு மொத்த திரையுலகத்தையே க ண் ணீ ரில் மூ ழ் கடிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் டி.பி.கஜேந்திரன் தன் கையால் எழுதிய சுயசரிதைத் தொகுப்பு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வை ர லா கி வருகின்றது. அதில் அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை தெரிந்து கொள்வோம்.

அந்த சுயசரிதையில் டி.பி.கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளதாவது எனது பூர்வீகம் தூத்துக்குடி. பிறந்தது சென்னை கோஷா ஆஸ்பத்திரியில். 8 -ம் வகுப்பு வரை சென்னையிலுள்ள ஆவிச்சி பள்ளியில் தான் படித்தேன். படிப்பு சரியாக வராமல் சினிமா ஸ்டூடியோக்களைச் சுற்றிக் கொண்டு திரிஞ்சேன். அப்பாவுக்கும் சினிமா கம்பெனியில வேலைங்றதால ப்ரிவியூ ஷோக்களைப் பார்த்து விட்டு உதார் விட்டுக் கொண்டு தி ரி ந்தேன். மகன் மெட்ராசுல இருந்தா படிக்க மாட்டான்னு, அப்பா என்னைக் காரைக்குடி பக்கம் உள்ள கண்டனூர் புது வயலுக்கு அனுப்பி வச்சாரு. அங்க என்னோட சித்தப்பா வருவாய் அதிகாரியா இருந்தாரு. அவரோட பிள்ளைங்க நல்லா படிப்பாங்க. அவங்கக் கூடப் படிச்சா நல்லா படிப்பேன்னு என்னைய அங்க அனுப்பி வச்சாரு. பட்டணத்துப் பையன் பட்டிக்காட்டுக்குப் போறதான்னு ரொம்ப வீ ம் பு பண்ணிப் பார்த்தேன். ஆனா ஒண்ணும் நடக்கல… வ லு க்கட்டாயமாக டி.சியைக் கூட வா ங்கம அங்க அனுப்பி வச்சாங்க.

பின்பு புதுவயல் ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில 9 – ம் வகுப்புல சேர்ந்தேன். சென்னைப் படிப்பு வேற, கிராமத்துப் படிப்பு வேற. சென்னை ஆவிச்சி பள்ளியில கடைசிப் பெஞ்சில் இருந்த நான் புதுவயல் பள்ளியில முதல் பெஞ்சுக்கு வந்தேன். அட, இது கூட நல்லாத்தான் இருக்குன்னு அந்தச் சூழ்நிலைய ஏத்துக்கிட்டேன். சென்னையில் இருந்து சென்றதால் உள்ளூரில் ஒரு மைனருக்கான மதிப்பு எனக்கு கிடைச்சுது. அதிலும் நான் விதவிதமா சட்டை போடுவேன். அதுவே என்னை வில்லேஜ் ஹீரோவாக ஆக்கியது. அதுவே பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனக்கு காதலையும் உருவாக்கியது. க டை சியில அந்தப் பொண்ணு என் காதலை க ழ ட்டி விட்டு, கணக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியாரோட ஓ டி ப்போனது தனிக்கதை.

இருப்பினும் எனக்குள் கலை தாகத்தை விதைச்சதும் இந்த ஊர் தான். அப்போ பள்ளியில ‘சாணக்கியன்’ நாடகம் போட ஏற்பாடு பண்ணிக்கிட்டிருந்தாங்க. நான் தான் சாணக்கியன் வேடம் போடுறதா முடிவு. இதுக்காக 40 பக்க வசனத்தை உரு போட்டுப் பயிற்சி எடுத்திருந்தேன். நாடகத்துக்கு ஒத்திகையெல்லாம் நடந்து முடிஞ்சிருந்த நேரம். அப்போ ஒரு மாணவியைப் பார்த்து கி ண் டல் பண்ணினது பெரிய பி ர ச் ச னையா ஆயிடுச்சு. அந்த மாணவி பேரு சின்னம்மா. நான் “சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா, உன் சிருங்காரம் மின்னுவதென்ன சின்னம்மா”ன்னு பாடப் போக அது அ ழு துகிட்டே ஊரைக் கூட்ட ஸ்கூல்ல இருந்து என்னைச் சஸ்பெண்ட் பண்ணிடாங்க. பசங்க ரொம்ப வ ரு த் தப்பட்டாங்க.

‘டேய் ஒரே நாள்ல சஸ்பெண்ட் உத்தரவ உ டை ச்சுக் காட்டுறேன்’னு ச வால் விட்டேன். காரணம், அடுத்த நாள் ஸ்கூல்ல ‘சாணக்கியன்’ நாடகம். நான் இ ல் லா மல் அந்த நாடகம் போட மு டி யாது. காரணம், சாணக்கியனே நான் தான். ஒரே நாள்ல ஆளை மாத்தி 40 பக்க வசனத்தை யாரையும் பேச வைக்க மு டியாது என்கிற நம்பிக்கை. நான் நினைச்ச மாதிரி வாத்தியார் உடனே ப த றிய டி ச்சு ஓ டி வந்தார். ‘சஸ்பென்ஸ் ஆர்டரை கேன் சல் பண்ணுங்க, வந்து நடிச்சு தர்றேன்’னு சொன்னேன். அவரும் செய்தார். ஒரு கலைக்கும், கலைஞனுக்குமான மதிப்பு அப்போ தான் தெரிஞ்சுது. ஆனாலும் சித்தப்பா இனி இவன் இங்க இருந்தான்னா நம்ம பேரையும் கெ டுத் து நம்ம பிள்ளைங்க படிப்பையும் கெ டு த் துடுவான்னு முடிவு பண்ணி சென்னைக்குப் பேக் பண்ணி அனுப்பினார்.

மீண்டும் அதே ஆவிச்சி ஸ்கூல், பழைய ஃபிரண்டுகள் என்று பள்ளிப் பயணம் தொடர்ந்தது. சினிமாவுக்கான தேடுதலும் தொடர்ந்தது. 1979-ஆம் ஆண்டில் எனக்கு திருமணம் நடந்துச்சு. அதே ஆண்டு, அதே மாதம் சினிமாவில் காலடி எடுத்து வச்சேன். ‘மழலைப் பட்டாளம்’ படம் கே.பாலச்சந்தர் தயாரிப்பு, லட்சுமி இயக்கினார். அந்தப் படத்தில் வேலை செய்’னு பாலச்சந்தர் சார் அனுப்பி வச்சார். அதற்குப் பிறகு ‘தில்லு முல்லு’, ‘தண்ணீர் தண்ணீர்’ படங்களில் அவரோட வேலை செஞ்சேன். சினிமா கத்துக்கிட்டதும், வாழ்க்கையோட சில நெறிமுறைகளைக் கத்துக்கிட்டதும் அவர் கிட்டதான்.  கே.பி சாருக்குக் கோபம் வந்தால் முதுகில் ‘மு ண்டம் மு ண்டம்’ என்று சொல்லிக் கொண்டே அடிப்பார். சந்தோஷம் வந்தாலும், முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே பாராட்டுவார்.

அவர் கையால் கு ட்டுப்பட்டவன் என்று நிறையப் பேர் சொல்வார்கள். ஆனால், நிஜத்தில் கு ட் டுப்பட்டவன் நான்தான். காரணம் நான் உயரம் கு றை வு என்பதால், அவரது கைவாகு என்னைக் குட்டத்தான் வரும். சந்தோஷம், கோ பம்  இரண்டுக்கும் கு ட்டுவார். கோ ப மாகக் கு ட்டும்போது வ லி க்கும். அதுதான் வித்தியாசம். இன்னிக்கு நாம பார்க்குற ரஜினி ஸ்டைல் என்பது உண்மையில் பாலச்சந்தரின் ஸ்டைல்தான். அவரது ஷூட்டிங் பார்த்தாலே சினிமா பார்த்த அனுபவம் கிடைக்கும். ‘தி ல்லு மு ல்லு’ பட எடிட்டிங் நடந்துக்கிட்டிருந்துச்சு. நிறைய காட்சிகளைக் கு றைக்க வேண்டி வந்தது. எப்போதும் கே.பிசார் காட்சிகளைக் குழந்தை மாதிரி நினைப்பார்.

கஷ்டப்பட்டு, செலவு பண்ணி எடுத்த காட்சிகளை நீ க் குவது என்பது அவருக்குக் க ஷ் ட மான காரியம். அதானால்தான் தி ட்டமிட்டுப் படம் எடுப்பார். ‘தில்லு முல்லு’வில் இந்தெந்த காட்சிகளை இவ்வளவு நீளம் கு றை த்துக் கொள் என்று என்னிடம் எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார். நானும் எடிட்டரும் உட்கார்ந்து எடிட் செய்ததில் நிறைய கு றை ந்து விட்டது. இப்போது சேர்க்க வேண்டும். அவரிடம் சொல்ல பயம். இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன். அவருக்கு ரொம்பச் சந்தோஷம் “டேய் காட்சியைக் கூட்டத்தானடா சொல்றே” என்று சந்தோஷமாகச் சொல்லி அவரே கூட்டினார். இப்படி அவருக்குள் ஒரு குழந்தை தனம் இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.

படப்பிடிப்பின் போது ஒரு பாடல் காட்சி எடுக்க வேண்டியிருந்ததது. அந்தப் பாடலின் ஒலி நாடா என்னிடம் இருந்தது. அது நான் குளிக்கப்போன இடத்தில் தண்ணீரில் வி ழு ந்து விட்டது. இதை டைரக்டரிடம் சொன்னால் சீட்டைக் கி ழி த்து விடுவார். சென்னையில் இருந்து வாங்கி வரவும் நேரமி ல் லை. அதனால் நாமாகவே ஓ டி விடுவோம் என்று சென்னைக்குக் கிளம்பி விட்டேன். கம்பெனி வண்டியில் சென்றால் தெரிந்து விடும் என்று நடந்தே கிளம்பினேன். நான் சென்று கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு முடிந்து இயக்குநர் காரில் வந்து கொண்டிருந்தார். நான் நடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டு காரில் ஏற்றி விஷயம் கேட்டார். சொன்னேன். அவரும் சிரித்தபடி “இது பெரிய விஷயமா அந்தக் காட்சியை எடுத்து விட்டேன். பேசாமல் வா” என்று கூலாகச் சொன்னார். மறுநாள் நண்பர்களிடம் விசாரித்தபோது ஒலிநாடாவுக்குப் பதிலாக அவரே அந்தப் பாடல் வரிகளைத் தாளத்தோடு பாடி படமாக்கியதாகச் சொன்னார்கள்.

அப்போதுதான் ஒரு உயர்ந்த கலைஞனைத் தரிசித்தேன். பாலச்சந்தர் சாரின் படங்களில் பணியாற்றியபோது விசுசாரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடமும் சினிமா கற்றுக் கொண்டேன். ‘சம்சாரம் அது மின்சாரம்’ உள்பட பல படங்களில் அவருடன் பணியாற்றினேன். அவர்மூலம்தான் முதல் படமான ‘லக்கி ஸ்டார்’ இயக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அதன் பிறகு ‘வீடு, மனைவி, மக்கள்’, ‘எங்க ஊரு காவக்காரன்’, ‘பாண்டி நாட்டுத் தங்கம்’, ‘எங்க ஊரு மாப்பிள்ளை’, ‘தாயா தாரமா’, ‘நல்ல காலம் பொறந்தாச்சு’, ‘பெண்கள் வீட்டின் கண்கள்’, ‘கொஞ்சும் கிளி’, ‘பாட்டு வாத்தியார்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘சீனா தானா’, ‘மகனே மருமகனே’ போன்ற படங்களை இயக்கினேன்.

எல்லாமே வெற்றிப்படங்கள், குறைந்த பட்சம் தயாரிப்பாளருக்கு லாபம் தந்த படங்கள் என்றே சொல்லலாம். எனது படங்கள் பெரிய பொழுதுபோக்கான ஜனரஞ்சகப் படங்களும் இ ல் லை. பெரிய கலைப் படைப்புகளும் இ ல் லை. நடுத்தர மக்களின் பி ர ச் ச னைகளை நகைச்சுவையாகச் சொல்லி அதற்கு எளிய தீர்வையும் சொல்பவையே. அதையே எனது பாணியாகவும் வைத்துக் கொண்டேன். எனது உருவமும், பேச்சும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் விட்டேன். ‘பாரதி’ படத்தில் ‘குவளை கண்ணன்’ கேரக்டரில் நடித்தது என் வாழ்வில் கிடைத்த பெரும்பாக்கியம். நிஜமான ‘குவளை கண்ணன்’ குடும்பத்தார் என்னைச் சந்தித்து, அவரைப் பார்த்தது போல இருந்தது என்று க ண் ணீ ர் விட்டதைத்தான் எனக்கான விருதாக நான் நினைக்கிறேன்.

சினிமாவில் நான் பெரிதாக எதையும் சாதித்து விட்டதாகக் கருதவி ல் லை. என் உயரத்துக்கும், திறமைக்கும் என்ன முடியுமோ அதைச் செய்திருக்கிறேன். ஆரம்பத்தில், என் உருவத்தைப் பார்த்து கிண்டல் செய்த நடிகர், நடிகைகள் பின்னாளில் என்னிடமே வாய்ப்பு கேட்டு நின்றதைச் சந்தித்திருக்கிறேன். புது இயக்குநர்கள், புதுத் தயாரிப்பாளர்கள் யார் வந்து அழைத்தாலும் நடித்துக் கொடுக்கிறேன். பணம் போட முன் வந்தால், படம் இயக்கி கொடுக்கிறேன். என்னால் இ ழ ந் தவர்கள் யாரும் இ ல் லை. நான் இ ழ ந் தது ஏராளம். நட்புக்காக, நண்பனுக்காக, பழக்கத்துக்காக என பல வகைகளில் இ ழ ந் தி ருக்கிறேன். இதற்காக யாரையும்  கு ற் றம் சொல்லவி ல் லை. சினிமா என்றால் அப்படித்தான். அது எனக்குப் புரிந்திருப்பதால் எதைப் பற்றியும் க வ லைப்படாமல் சினிமாவில் பயணத்தேன்.

என்னைப் பெற்றவர்கள், வளர்த்த டி.பி.முத்துலட்சுமி அம்மாள், குருவாக இருந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் சார், கற்றுக் கொடுத்த விசு சார், வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்கள், உடன் பணியாற்றிய கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், என்னை இயக்கிய இயக்குனர்கள், எனக்கு உறுதுணையாக இருந்து வரும் குடும்பத்தினர்கள், ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்” என அதில் கஜேந்திரன் மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த சுயசரிதைப் பதிவை வாசிக்கும் போது பலரின் கண்களில் க ண் ணீர் வந்து விடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *