பொதுவாக சினிமாவில் நடிகர் நடிகைகள் அதிக நாட்கள் நீடிப்பது என்பது தற்போது பெரும் சவாலாக தான் இருந்து வருகிறது. அந்த வகையில் 2003ம் ஆண்டு வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் தற்போது அகிலன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாக காத்திருக்கிறது. மேலும் இறைவன், JR 30 ஆகிய படங்களை தன கைவசம் வைத்துள்ளார். இறைவன் மற்றும் JR 30 ஆகிய படங்களின் படப்பிடிப்பு அண்மையில் தான் துவங்கியது.
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோமாளி. இப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெறும் பள்ளி பருவ கதாபாத்திரத்திற்காக ஜெயம் ரவி இரண்டே வாரத்தில் 18 கிலோ எடையை கு றைத்துள்ளார். இரண்டே வாரத்தில் எப்படி 18 கிலோ உடல் எ டையை குறைத்தேன் என்ற ர க சியத்தை அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதில் 18 கிலோ உடல் எ டையை கு றை க்க இரண்டு வாரத்திற்கு கேரட் மற்றும் தக்காளியை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளாராம். அது மட்டுமில்லாமல் மேலும், எப்போதாவது விருப்பப்பட்டால் பிளாக் காஃபி குடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதன் முலம் தான் இரண்டே வாரத்தில் 18 கிலோ உடல் எடையை குறைத்தேன் என்று கூறியுள்ளார். ஆனால் இதை சரியான வழி காட்டுதல் எதுவும் இல்லாமல் வேறு யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்றும் ஜெயம் ரவி கூறியுள்ளார்.