உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாட மக்கள் எதிர்ப்பார்ப்போடு இருக்கின்றனர். காதலர் தினம் தொடங்கும் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் காதலர் வாரத்தின் நான்காவது நாளான இன்று ப்ராமிஸ் தினம் (promise day) காதலர்கள் தங்களுக்குள் வாக்குறுதிகளை கொடுத்து அதை கடைபிடிக்கும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த சத்திய தினத்தில் ஒருவருக்கொருவர் வாக்குறுதி கொடுப்பது உறவின் பொறுப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இது மாதிரி நடிகர் அஜித், ஷாலினி காதல் கதையில் ஒரு வாக்குறுதி கொடுத்து இப்போது வரை அது காப்பாற்றப்பட்டு வருகிறது.
அது என்னவென்று தெரியுமா? 23 ஆண்டுகள் ஆன போதும் அஜித் அதை உறுதியாக காப்பாற்றி வருகிறார். இன்றைய தினம் அஜித் மற்றும் ஷாலினி காதலிக்கும் போது பெறப்பட்ட முக்கியமான சத்தியம் குறித்து தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவில் பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் தான் அஜித்- ஷாலினி. உண்மையான அன்பு, காதல், தோழமைக்கு எடுத்துக்காட்டாக பல ஆண்டுகளாக ஒற்றுமையாக திகழ்கின்றனர்.
நடிகை ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி, பின்னர் கதாநாயகியாக நடித்தார். இவர்கள் இருவரும் 1999ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான ‘அமர்க்களம்’ படப்பிடிப்பின் போது காதல் பயணத்தைத் தொடங்கினர். அடுத்த ஆண்டே திருமணமும் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
அஜித்-ஷாலினி காதல் மிகவும் ஆச்சர்யபடக் கூடியது. காரணம் தற்போது உள்ள பல ஜோடிகள் திருமணமாகி ஒரு வருடம் கூட சேர்ந்து வாழ்வதில்லை. அப்படியிருக்கின்ற நிலையில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்பு தன் காதல் மனைவி ஷாலினிக்கு கொடுத்த வாக்குறுதியை நடிகர் அஜித் இப்போது வரை காப்பாற்றி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? இல்லையென்றாலும் அதுதான் உண்மை.
அவர் மனைவியையும், குடும்பத்தையும் அவர் அதிகமாக நேசிப்பதே அந்த சத்தியத்தின் பின்னணியாகும். இவர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கு முன்பு ஷாலினி அஜித்திடம், ” திருமணத்திற்கு பிறகு ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும், ஒரு மாதத்தில் 15 நாட்களில் படத்திற்கும், மீ தி நேரத்தை குடும்பத்துடன் செ லவிட வேண்டும்” என்று கூறி சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.
அன்று முதல் இன்று வரை ஷாலினிக்கு கொடுத்த வாக்கை அஜித் காப்பாற்றி வருகிறார். நட்சத்திர தம்பதிகள் வி வா கர த்து செய்வது அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் நடிகர் அஜித்தும் ஷாலினியும், இந்த கால தலைமுறைக்கு முன் மாதிரியாக திகழ்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட துணிவு படத்தின் வெற்றியை அஜித் தனது குடும்பத்தினருடன் போர்ச்சுகளில் கொண்டாடினர். அங்கு எடுத்த பு கைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
View this post on Instagram