பொதுவாக விஜய் தொலைக்காட்சி என்றாலே ஒரு காலத்தில் டிடி தான் நியாபகத்திற்கு வருவார். ஆனால் இப்போது விஜய் டிவி என்றால் பிரியங்காவும், அவரது சிரிப்பும் தான் இப்போது மக்களுக்கு நியாபகம் வருகிறது. அந்த அளவிற்கு இந்த தொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது பார்த்தால் சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என இரண்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா அவர்களின் சுற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர் சந்திரன் குறித்த ஏ வி வீடியோவை பகிரும் போது, அவர் தன்னுடைய தாய் பற்றி உருக்கமாக பேசுகிறார்.
சிங்கிள் மதராக இருந்து 12 வருடமாக வீட்டு வேலை செய்து தன்னையும் தன்னுடைய அக்காவையும் தாய் வளர்த்தது குறித்து சந்திரன் உருக்கமாக பேச அதைக் கேட்டதும் பிரியங்கா உடனே க ண் ணீர் விட்டு அ ழு கி றார். சிங்கிள் பெற்றோராக பிள்ளைகளை வளர்க்கும் அனைத்து சிங்கிள் பெற்றோருக்கும் லவ் யூ.! அம்மா ஐ லவ் யூ! என எமோஷ்னலாக பேசுகிறார்.