பிரபுவுக்கு என்னாச்சு…!! தி டீ ரென ம ரு த்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு அ றுவை சி கி ச் சை…!! ம ருத்துவமனை வெளியிட்ட ப ரபர ப்பு அறிக்கை…!!

General News

தமிழ் சினிமாவில் சிறந்த ஹீரோவாகவும், துணை நடிகராகவும் இருப்பவர் இளைய திலகம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன், என்கிற அடையாளத்துடன் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் கூட, புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதற்கேற்ப ஒரு சில படங்களிலேயே அப்பாவின் பேர் சொல்லும் பிள்ளை என தனது நடிப்புத் திறமையால் பெயர் எடுத்தவர் நடிகர் பிரபு. 1982 ஆம் ஆண்டு தன்னுடைய அப்பா சிவாஜி கணேசன் முக்கிய வேடத்தில் நடித்த ‘சங்கிலி’ படத்தில் ஹீரோவாக நடித்த பிரபு, முதல் படத்திலேயே அனைவரையும் தன்னுடைய நடிப்பால் அசர வைத்தார்.

இதை தொடர்ந்து அதிசய பிறவி, கோழி கூவுது, நீதிபதி, ராகங்கள் மாறுவது இல்லை, என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கினார். 80 மற்றும் 90களில் ஹாண்ட்சம் ஹீரோவாக வலம் வந்த இவரின் கன்னகுழியில் விழாதவர்களே இல்லை எனலாம். சமீப காலமாக மிகவும் வலுவான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் சமீபத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் கூட முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் பிரபு தி டீ ரென ம ரு த்துவமனையில் அ னு ம திக்கப்பட்டுள்ளதாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே ம ரு த்துவமனை,  ப ரப ரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் பிரபு, நேற்று இரவு சிறுநீரகப் பி ர ச்  ச னை காரணமாக அ னுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு சிறுநீரகத்தில் கல் அ டைப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று காலை யூத்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. தற்போது அவரது உடல்  நலத்துடன் இருக்கிறார். அ றுவை சி கி ச் சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவ சோ த னை களுக்கு பிறகு இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் விரைந்து அவர் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிரபலங்கள் பலரும், போனில் தொடர்பு கொண்டு பிரபுவை விசாரித்து வருகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *