பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றிருந்தாலும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதன் 9வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து பல பின்னணி பாடகர் மற்றும் பாடகிகள் தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் ஒன்றாக தொகுத்து வழங்கி வருகிறார்கள் .
இவர்கள் இருவருக்காகவே பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில், என்ன நடந்தது என்று தெரியவில்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சசியில் அடுத்து வரும் எபிசோடை மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்க வி ல் லையாம்.
அவருக்கு பதிலாக ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டும் ரியோ ராஜ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கவுடன் இணைந்து தொகுத்து வழங்கப் போகிறாராம். ஆனால், ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டும் மாகாபா வரமாட்டார் என்ற செய்தி பலருடைய காதுக்கு இனி அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கே வரமா ட்டார் என்பது போல் போய் சேர்ந்து விட்டது.
ஆனால் அது உணமையி ல் லை, வெறும் ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டுமே மா கா பா வராமல் வெளியேறியுள்ளார். அடுத்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மா கா பா வந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.