38 வயதில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த பிரபல நடிகை… வருங்கால கணவருக்கு இத்தனை க ண் டி ஷன்களா…? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

Image News

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. முதல் படத்திலேயே தனது தனித்துவமான நடிப்பில் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன் பிறகு இவர் ரசிகர் பட்டாளத்தையே தன் வ சம் வைத்துள்ளார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார்.

இவர் முதலில் 2002ம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தார். தற்போது இவருக்கு 38 வயது ஆகிறது.பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இத்தனை வயதாகியும் இதுவரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கு காரணம் தனக்கு தகுந்தாற் போலவும், எனக்கு பிடித்தது போலவும் இதுவரை யாரும் இல்லை என்று ஒருமுறை கூறியிருந்தார்.

அப்படி இருந்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், தனது வருங்கால கணவர் குறித்த சில விஷயங்களை மனம் திறந்துள்ளார் நடிகை சதா. அதாவது, திருமணம் என்பது எனது உரிமை எனவும், திருமணம் குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமை தனக்குத்தான் உண்டு எனவும் கூறியுள்ளார்.

தங்களுடைய மகிழ்ச்சிக்காக யாரையும் சார்ந்திருக்க கூடாது எனவும், தனக்கு வரும் கணவர் எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய உழைப்பை நம்பியிருக்கக் கூடாது எனவும் சதா கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் உதாரணமாக, 10 பேர் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அதில் 5 பேராவது சந்தோசமாக இருக்கிறார்களா? எனவும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

தான் திருமணம் செய்து கொள்பவர் பணக்காரராக இருக்க வேண்டாம். நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்னை சார்ந்து அவர் இருக்கக் கூடாது என்பதும் அவருடைய கருத்து. இறுதியாக முக்கியமான ஒரு விஷயத்தையும் கூறியுள்ளார். அது என்னவென்றால், சைவ உணவு உண்பவரையே தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர் விரும்பியது போல கணவர் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாகவும், திருமணத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *