சுஜாதா மோகன் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகி ஆவார், இவர் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பாடி பிரபலமானவர். கன்னடம், படகா, இந்தி மற்றும் மராத்தி மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கும் பாடியுள்ளார். 48 ஆண்டுகால வாழ்க்கையில், அவர் இன்றுவரை 20,000க்கும் அதிகமான பாடல்களைப் பதிவு செய்துள்ளார். இவர் 18 வயதிலேயே டாக்டர் வி. கிருஷ்ண மோகனை மணந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவர் தான் ஸ்வேதா மோகன். இவரை நமக்கு நன்றாகவே தெரியும்.
சூப்பர் சங்கரின் ஒரு நடுவர் ஆவார் ஸ்வீத மோகன். ராதிகா திலக் மற்றும் ஜி.வேணுகோபால் அவரது உறவினர்கள். தென்னிந்திய திரைப்பட இசை உலகில் சுஜாதா தனது பாடல்களுக்காக பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். இவருக்கு 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அவருக்கு கேரளா, தமிழ்நாடு மாநில விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாடகி சுஜாதா கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கூறியதாவது “எனக்கு இதுவரை இரண்டு முறை க ரு ச் சி தைவு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைகளுக்கு பின்னர் தான் ஸ்வேதா மோகன் பிறந்தார். அப்போது சினிமாவில் நான் மிகவும் பிஸியாக இருந்ததால் ஸ்வேதா மோகனை சிறுவயதில் என்னால் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை. மேலும் இவரது பள்ளி கல்லூரி விழாக்களுக்கு கூட போக முடியவில்லை. இந்த ஒரு காரணத்தினால் தற்போது நான் ஸ்வீதாவின் குழந்தைகளுடா அதிக நேரத்தை செலவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.