பிரபல நடிகையின் தாயாருக்கு 47 வயதில் குழந்தை பிறந்துள்ள சூழலில் இது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் அதிகம் வை ர லா கி வருகிறது. கடந்த ஆண்டு, தமிழில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் வீட்ல விசேஷம். இந்த திரைப்படத்தில், ஆர் ஜே பாலாஜியின் தாயாக வரும் ஊர்வசி கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்று கொள்வது போல திரைக்கதை வரும். இது ஹிந்தியில் ஹிட்டான பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆகும். இந்த நிலையில், கிட்டத்தட்ட வீட்ல விசேஷம் திரைப்படத்தில் வருவது போல, நிஜத்தில் ஒரு ச ம்பவம் நடைபெற்றுள்ளது.
கேரளாவில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் ஆர்யா பார்வதி. இவருக்கு தற்போது 23 வயதாகும் சூழலில் இவரது தாயார் 47 வயதில் இரண்டாவது முறையாக குழந்தை பெற்றெடுத்துள்ளார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாயார் கர்ப்பமாக இருப்பது தொடர்பான பு கைப்படத்தை ப கி ர்ந்து விரைவில் தான் சகோதரி ஆக போவதாகவும் ஆர்யா பார்வதி குறிப்பிட்டு இருந்தார். அப்படி இருக்கையில், அவரது தாயாருக்கு தற்போது குழந்தையும் பிறந்துள்ளது.
சீரியல் நடிகையாக இருந்து வரும் ஆர்யா பார்வதி, அதிக காலம் வீட்டில் இல்லாமல் வெளியே தங்கி நடித்து வருவதாகவும் தெரிகிறது. முன்னதாக, தான் 23 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பது மகளுக்கு தெரிந்தால் அவர் என்ன நினைப்பார் என்றும், தவறாக நினைத்து விடுவாரோ எனவும் நினைத்து ஆர்யா பார்வதியின் தாயார் மகளிடம் சொல்லாமல் இருந்ததாக தெரிகிறது. அப்படி இருக்கையில், சிறிது மாதங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்த ஆர்யா, தனது தாய் மீண்டும் கர்ப்பம் ஆனதை எண்ணி மகிழ்ச்சியிலும் திளைத்துள்ளார்.
தொடர்ந்து தான் சகோதரி ஆகப் போவதையும், ஒரு தாய் ஸ்தானத்தில் மாறப் போவதையும் எண்ணி நெகிழ்ச்சியுடனும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது ஆர்யா பார்வதியின் தாய்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது பற்றியும் உருக்கமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யா பார்வதி பதிவிட்டுள்ளார். மேலும் தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக ஆர்யா பார்வதி குறிப்பிட்டுள்ளார்.