சோபிதா துலிபாலா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முதன்மையாக தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் பணிபுரிகிறார். அவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013 பட்டத்தை வென்றார் மற்றும் மிஸ் எர்த் 2013 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார். அனுராக் காஷ்யப்பின் த்ரில்லர் படமான ராமன் ராகவ் 2.0 இல் துலிபாலா தனது நடிப்பில் அறிமுகமானார் மற்றும் மேட் இன் ஹெவன் என்ற அமேசான் பிரைம் வீடியோ நாடகத் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
துலிபாலா தெலுங்கு படங்களான கூடாச்சாரி மற்றும் மேஜர், மலையாள படங்களான மூத்தோன் மற்றும் குருப் மற்றும் தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன்: 1 ஆகியவற்றில் தோன்றினார். பொன்னியின் செல்வன் படத்தில் அமைதியான அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்த ஷோபிதா, பாலிவுட்டில் தற்போது தி நைட் மேனேஜர் என்கிற வெப் தொடரில் நடித்து கவர்ச்சியில் புகுந்து விளையாடி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். பிகினி காட்சிகள்,
லிப் லாக் முத்தக் காட்சிகள் என அன்லிமிடெட் கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு கவர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் சோபிதாவா இது என அதிர்ச்சியாகி உள்ளனர். இதில் இன்னும் மிகப்பெரிய சர்ச்சையான விஷயம் என்னவென்றால், இந்த வெப் தொடரில் நடித்துள்ள பிரபல மூத்த பாலிவுட் நடிகரான 66 வயதாகும் அனில் கபூருடன் அவர் 30-க்கும் மேற்பட்ட முத்தக் காட்சிகளில் நடித்துள்ளது தான். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் வாயடைத்துப் போய் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.