20 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்த பிரபல முன்னணி நடிகை..!! அதிகாரப்பூர்வமாக வெளிவந்த அறிவிப்பு..!! யார் தெரியுமா...?

20 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்த பிரபல முன்னணி நடிகை..!! அதிகாரப்பூர்வமாக வெளிவந்த அறிவிப்பு..!! யார் தெரியுமா…?

Cinema News

தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிக் கொண்டு  இருக்கும் திரைப்படம்  தான் ஜெ யில ர். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகின்றார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த, 22 ஆம் தேதி தொடங்கப் பட்டது. மேலும் தொடர்ந்து இந்த திரைப்படத்தில்  நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளை குறித்ததான அறிவிப்பும் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகிய முக்கிய பிரபலங்கள்  நடித்து வருகின்றார்கள். இதைத் தொடர்ந்து சமீபத்தில் அதிகாரப் பூர்வமாக நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடிக்க  இருப்பதாக படக்குழுவிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து படையப்பா மற்றும் பாபா ஆகிய இரண்டு திரைப்படங்களில்  நடித்திருப்பார்கள்.

அதில் குறிப்பாக படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் ரஜினிக்கு இணையாக தனது சிறப்பான  நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். அன்று முதல் இன்று வரை இன்னும் ரசிக்கும் படியான ஒரு நடிகையாக இருந்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து கடந்த, 2002-ஆம் ஆண்டு வெளிவந்த பாபா என்ற திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கேமியோ ரோலில் நடித்திருப்பார்.

அந்த வகையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில்    இணைந்துள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அறிந்த பல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *