பிரபல நடனக்கலைஞர் ஷீபா. இவர் இயக்குனர் ஷியாம பிரசாத்தின் மனைவியும் ஆவார். இவருக்கு வயது 59 ஆகிறது. இவர் கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு 10:30 மணிக்கு காலமானார். ஷீபா பு ற்றுநோ ய்க்கு சி கி ச் சை பெற்று வந்த நிலையில் சி கி ச் சை ப ல னி ன்றி கா ல மானார். ஷீபா நடனக் கலைஞராகவும், தூர்தர்ஷனில் தொகுப்பாளராகவும், எஸ் பி ஐ அதிகாரியாகவும் பணிபுரிந்தவர் ஆவார்.
தூர்தர்ஷனில் அறிவிப்பாளராக மட்டுமல்லாமல் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தான் ஷியாம பிரசாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தூர்தர்ஷனில் ‘மெயில் பீலி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இவருக்கு விஷ்ணு, சிவகாமி என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்களுக்கான இறுதிச் சடங்கு இன்று புதன்கிழமை தைக்காடு சாந்தி கவடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.