விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அது மட்டுமல்லாது இந்த சீரியல்கள் டி ஆர் பி ரேட்டிங்கிலும் முன்னணியில் தான் இருந்து வருகின்றன. சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி மிகப்பெரிய கம்பெனியின் கேட்டரிங் ஆர்டரை கைப்பற்றியுள்ளார். இதனால், ராதிகா செம டெ ன் சனில் இருக்கிறார். இதனை கெ டு த்து விட ராதிகா சூ ழ் ச் சிகளை செய்கிறார்.
தற்போது பாக்கியா இங்கிலீஷ் கற்றுக் கொள்ள இங்கிலீஸ் கிளாசில் இணைந்திருக்கின்றார். இந்த மகிழ்ச்சியில் பாக்கியலட்சுமி ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் கோபி தனது மனைவி ராதிகாவிடமும், மகள் இனியாவிடமும் படாதபாடுபட்டு வருகிறார்.
இவ்வாறு விறுவிறுப்பான கதையுடன் நகர்ந்து கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது புதிதாக ஹீரோ ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை 90ஸ் கால கட்டத்தில் முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் ரஞ்சித் தான். இனி சீரியலில் நிறைய ட்விஸ்ட் இருக்கும் போல.
ஆம், நடிகர் ரஞ்சித் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கும் எனத் தெரிகிறது. என்ன ரோல்? இனி சீரியலில் என்னென்ன மாற்றங்கள் வரப்போகுது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவர் ஏற்கனவே செந்தூரப்பூவே எனும் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.