தன் மகனை அழகாக பாட்டுப் பாடி தூங்க வைக்கும் அஜய் கிருஷ்ணா...!! என்ன பாடல் தெரியுமா...? அவரது மனைவி வெளியிட்ட வீடியோ...!!

தன் மகனை அழகாக பாட்டுப் பாடி தூங்க வைக்கும் அஜய் கிருஷ்ணா…!! என்ன பாடல் தெரியுமா…? அவரது மனைவி வெளியிட்ட வீடியோ…!!

General News videos

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா தன்னுடைய மகனை தாலாட்டி தூங்க வைக்கும் வீடியோவை அவருடைய மனைவி ஜெசி பகிர்ந்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என தனித்தனியாக பல சீசன்கள் ஒளிபரப்பாகி விட்டது. தற்போது பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாடி வரும் போட்டியாளர்கள் சிலர் இப்போதே மக்களின் பேவரட் நபர்களாக மாறி விட்டார்கள் என்றே சொல்லலாம்.

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் போலவே மிமிக்ரி செய்து பாடியதன் மூலமாக பலருடைய மனங்களில் நீங்காத இடத்தை இப்போது வரைக்கும் பிடித்து கொண்டிருக்கிறார். உதித் நாராயணன் பாட்டை கேட்கும் போதெல்லாம் அஜய் கிருஷ்ணா நினைவிற்கு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த அளவிற்கு அவருடைய பாடல்களை தத்ரூபமாக பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.
தற்போது நிறைய கச்சேரிகள், திருமணங்கள் என பாடல்கள் பாடி வருகிறார். இந்த நிலையில் தான் அஜய் கிருஷ்ணா தான் காதலித்து வந்த ஜெசி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமணம் இந்து முறைப்படி கோவிலிலும், கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சிலும் வைத்து நடைபெற்றது.

இவர்களுடைய திருமணத்திற்கு அதிகமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை கூறினார்கள். அவருடைய ரசிகர்களும் வாழ்த்து கூறினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாள் அன்று அவருடைய மனைவி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். இதற்கு அதிகமானோர் ஆசீர்வாதங்களை கூறி வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா தன்னுடைய குட்டி மகனை தாலாட்டி தூங்க வைத்திருக்கிறார். அந்த வீடியோவை அவருக்கே தெரியாமல் ஜெஸி எடுத்து அதை தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து அந்த வீடியோவிற்கு கடமை உணர்ச்சி உள்ள ஒரு தந்தை என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். தற்போது அது அதிகமாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

இதோ கியூட் வீடியோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *