இயக்குனர் கரு பழனியப்பன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து வி ல கி விட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் போன்ற சொல்லாடல்கள் கசப்பாக இருக்கும் என்றால் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். ஹவுஸ் புல் படத்தில் நடிகராக அறிமுகமாகி பார்த்திபன் கனவு என்கிற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கரு பழனியப்பன். இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குனர் என்கிற மாநில அரசின் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிவப்பதிகாரம் என்கிற படத்தை இயக்கினார். அதன் பின்னர் பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம் போன்ற படங்களை அவர் இயக்கியிருக்கிறார். தற்போது ஆண்டவர் என்கிற ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் நட்பே துணை, டி ப்ளாக் போன்ற படங்களில் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் கரு பழனியப்பன். விஜய் டிவியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக கோபிநாத்தால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நீயா நானா நிகழ்ச்சி போன்றே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற வி வா த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா என்கிற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நீயா நானா” நிகழ்ச்சியை காப்பியடித்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருவதாக ஒரு பக்கம் வி ம ர்சனம் இருந்த போதிலும், இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கத்தான் செய்கிறது. மேலும் அவ்வப்போது கரு பழனியப்பன் மீது சில வி ம ர்சனங்களும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
இயக்குநர் கரு.பழனியப்பனும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல்வேறு பிற்போக்கு கருத்துக்களுக்கு எ தி ராக குரல் கொடுத்து வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் சாதி, மத ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும், பெண்கள் ஒடுக்குமுறை, மூட நம்பிக்களுக்கு எதிராகவும் பல முற்போக்கு தலைப்புகளில் விவாதங்களை நடத்தி சிறப்பான கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். இதனால் தமிழா தமிழா நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவரப்பட்டது. இதில் விவாதிக்கப்படும் விசயங்களும் வெளியில் பேசு பொருளாகின. கரு பழனியப்பனுக்கு பி டிக்காத எ தி ர் கருத்துக்கள் இருந்தால், அந்த கருத்துக்களை பற்றி பேசுபவர்களை அ தட்டி அ ட க்கி வைத்து விடுவார் என்ற வி ம ர்சனம் இருந்து கொண்டே இருந்தது.
கோபிநாத்தை பார்த்து எப்படி நிகழ்ச்சி நடத்துவது என்று கற்றுக் கொள்ளுங்கள் என்று காட்டமான வி ம ர்சனங்களையும் நெட்டிசன்கள் முன் வைத்து வந்தனர். திராவிட கருத்தியல் பேசி வரும் கரு பழனியப்பன் திராவிட மேடைகளில் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து அதிகாரப் பூர்வமாக வி ல குவதாக அறிவித்திருக்கிறார். இது ஜீ தமிழ் ரசிகர்களிடையே அ திர் ச் சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி அன்பு!! முத்தங்கள்!!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது. ஜீ தமிழ் உடனான நான்கு வருட தமிழா தமிழா பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் க ச ப்பாய் இருக்கும் எனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது, நன்றி ஜீ தமிழ் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு கீழே பலரும் கரு பழனியப்பனின் வி ல கலை ஆதரித்தும், எ தி ர் த்தும் என இரண்டு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
@ZeeTamil உடனான நான்கு வருட” தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! …..
நன்றி! @ZeeTamil @sijuprabhakaran … pic.twitter.com/uxwQLfa66o— கரு பழனியப்பன் (@karupalaniappan) March 7, 2023