“தமிழா தமிழா”க்கு முற்றுப்புள்ளி வைத்த கரு. பழனியப்பன்! இதுக்கு பின்னால ஒரு பெரிய அரசியலே இருக்கா??

Cinema News

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய “தமிழா தமிழா” நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் கரு. பழனியப்பன் வி லகுவதாக அறிவித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அதற்கு என்ன காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.அதை கடைசியில் பார்ப்போம்.

டிஆர்பி ரேங்கில் முதல் இடத்தை பிடிக்கும் தமிழா தமிழா:
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் பரபரப்பாகிய ஓடிய நிகழ்ச்சி தான் “தமிழா தமிழா”. இந்த ஷோவில் விவாதிக்கப்படும் விடயங்கள் அனைத்தும் இன்றைய சமூகத்திற்கு ஏற்றதாக இருக்கும்.இந்த நிலையில் கரு. பழனியப்பன் பிறந்த நாளான இன்று இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, “எங்கெங்கோ இருந்து பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. அன்பு முத்தங்கள்” என பதிவிட தொடங்கிய அவர் பின்னர் ஒரு அ திர்ச்சியான செய்தியை அவருடைய ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார்.

கரு. பழனியப்பன் கூறிய அ திர்ச்சி தகவல்
மேலும், “இப்படி முகம் அறியாத முகங்களும், அவர்களின் அன்பும் தான் என்னை இவ்வளவு உயரத்திற்கு வழிக்காட்டியுள்ளது.

இன்றுடன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ” தமிழா தமிழா” பயணம் நிறைவிற்கு வருகிறது. சுமார் 4 வருடங்கள் என்னுடன் இணைந்து பயணித்த அனைவருக்கும் நன்றிகள், சமூக நீதி, சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் க சப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இ னிதானது” என குறிப்பிட்டு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த கரு. பழனியப்பனின் ரசிகர்கள் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.இவரின் இந்த முடிவிற்கு பின்னால் இருக்கும் காரணத்தை தெரிந்துக் கொள்ள ரசிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.”நன்றி மனிதன்.com”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *