தமிழ் சினிமாவில் 2006ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கிய முதல் திரைப்படமான ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நரேன். இதனையடுத்து அவர் பள்ளிக்கூடம், அஞ்சாதே, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி ச மீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் 80 நாட்களை கடந்து, திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் க வ னம் செலுத்தி வந்ததால், தமிழில் பட வாய்ப்புகள் கு றைய துவங்கியது. இருந்தாலும் கூட ஹீரோவாக மட்டும் நடிக்காமல், வில்லன், மற்றும் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்கத் துவங்கினார். இந்த நிலையில் ஆகஸ்ட் 26, 2007 ஆண்டு கோழிக்கோட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரான மஞ்சு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளினியை திருமணம் செய்து கொண்டார் நடிகர் நரேன். இந்த நிலையில் இந்த தம்பதிக்கு தன்மியா என்ற ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் நரேன் தனது மனைவி இரண்டாவது முறையாக க ர்ப்பமாக உள்ள தகவலையும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram