சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் பல ஆண்டுகள் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் நடிகைகள் அப்படி கி டை யாது. குறிப்பிட்ட வயது ஆகி விட்டால் அவர்கள் ஹீரோயினாக நடிக்காமல் குணச்சித்திர நடிகை அல்லது அக்கா அண்ணி என்றும், ஒரு சிலர் சின்ன வயதிலேயே அம்மா கதாபாத்திரத்தில் கூட நடித்து விடுகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு சிலர் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு பின் ஆள் அடையாளம் தெரியாமல் சினிமாவில் இருந்து வி ல கி போ ய்விடுகின்றனர்.
அந்த வகையில் இருக்கும் ஒரு நடிகை தான் மானு. அஜித் நடிப்பில் இதுவரை வந்த பல படங்களில் ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் என்றால் அது காதல் மன்னன். சரண் அவர்களின் இயக்கத்தில் 1998ம் ஆண்டு வெளியான இப்படம் 25 ஆண்டுகளை கடந்து விட்டது. அஜித், மானு, எம்.எஸ்.விஸ்வநாதன், விவேக் என பலர் படத்தில் நடித்திருந்தார்கள். தன்னுடைய 16 வயதில் மானு அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தை தாண்டி பரத்வாஜ், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் படத்தில் வந்த பாடல்கள் அனைத்துமே செம ஹிட். நடிகை மானு சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒரு பெரிய இயக்குனர், பெரிய தயாரிப்பு மற்றும் அஜித்தை போல ஒரு சக நடிகருடன் நடித்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். 22 ஆண்டுகள் கழித்தும் இந்த படம் இன்னமும் மக்களிடம் பேசப்படுகிறது என்றால் படக்குழுவிற்கு தான் சேரும் என கூறியுள்ளார்.
அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் செட்டில் ஆகி விட்டார். அங்கு அவர் நடன நிகழ்ச்சி நடத்தி வருகின்றார். காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை எட்டிய நிலையில் நடிகை மானுவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இது தற்போது ரசிகர்களிடையே வை ர லா கி வருகிறது.