நடிகர் விஜய்யின் மகள் திவ்யாவா இது? வெளிநாட்டு தோழிகளுடன் எடுத்துக் கொண்ட மிரர் செல்பி.. பு கைப்படத்தை பாருங்க…!!

Cinema News

பிரபல நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா, தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது நமக்கு தெரிந்ததே. பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடித்து வருகிறார்.

வாரிசு படத்தில் நடித்து முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இவருக்கு சங்கீதா என்பவருடன் திருமணமாகி ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இதில் ஜேசன் வேட்டைக்காரன் படத்திலும், திவ்யா தெறி படத்திலும் நடித்துள்ளனர்.

தெறி படத்தில் நடித்த போது சின்னப் பெண்ணாக இருந்த திவ்யா சாஷா, தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மளமளவென வளர்ந்து விட்டார். இவர் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில், அந்த புகைப்படங்களை விஜய்யின் ரசிகர்கள் வை ர லா க்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *