திருமண தேதியை உறுதி செய்த குக் வித் கோமாளி புகழ்…!! எப்போது தெரியுமா…? வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

General News

விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகின்றன. அப்படி பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் அதில் மக்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி சீசன் 2 முடிவில் 8 படங்களில் நடிக்கும் வாய்ப்பை புகழ் பெற்றார்.

அதிலும் அஜித், சூர்யா, சந்தானம் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் புகழ். அதற்கு அடுத்ததாக Zoo keeper எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

நடிகர் புகழ் 5 வருடமாக பென்சியா என்பவரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூறினார். இணைய தளங்களில் இருவரும் பல புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது புகழ் மற்றும் பென்சியா ஆகிய இருவரின் திருமணத் தேதி உறுதியாகியுள்ளது. ஆம், வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி புகழ் – பென்சியா காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ளது என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *