தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவர் பல படங்களில் நடித்து வெற்றி கண்டவர். தற்போது இவர் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. தற்போது பல்வேறு சினிமா வேலைகளினால் பிஸியாக இருக்கும் நடிகர் சிம்பு 40 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
இவருக்கு இந்த வருடத்தில் க ட் டாயமாக திருமண செய்து வைத்தே ஆக வேண்டும் என்ற முழு முயற்சியில் குடும்பத்தினர்கள் அனைவரும் தீ விரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில், சிம்பு திருமணத்திற்கு பெண் பார்க்கும் வேலைகளில் அவரது பெற்றோரும், தங்கையும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
முக்கியமாக சிம்பு திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் மயிலாடுதுறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உ றுதியாக இருக்கிறார்களாம். இதன் மூலம் நடிகர் சிம்பு விரைவில் திருமணம் செய்யப் போவது குறித்து தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் வட்டாரத்தில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.