செம்ம நியூஸ்!! நயன்தாராவின் 75 வது படத்தின் ஹீரோ யார் தெரியுமா…? அட 10 வருடங்களுக்குப் பின் இணையும் வெற்றி நாயகன்…!! அட இவர்தான் இயக்குநரா…!!

Cinema News Image News

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா தான் நயன்தாராவின் 75-வது படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நயன் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகு தன்னுடைய கெரியர் பா  தி க் காத வகையில் வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானார். நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘கனெக்ட்’ படம் பெரிய வரவேற்பை பெறவி ல் லை என்றாலும் மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்த படம் லாபத்தை ஈட்டியது.


தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது டாப் ஹீரோயின் ஆக கோலிவுட்டில் தடம் பதித்திருக்கிறார். அதோடு தற்போது இவர் பாலிவுட்டிலும்  அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலமும் கால் பதித்துள்ளார். ஜவான் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

இதுதவிர தமிழில் இறைவன் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா. அஹமத் இயக்கத்தில் தயாராகி உள்ள இறைவன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. மேலும் நயன்தாராவின் 75-வது படத்தைக் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 75 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சார்பட்டா பரம்பரை 2 படத்தை தயாரிக்க உள்ள நாத் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார்.

இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு எளிமையான முறையில் போடப்பட்டது. இந்த படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக யார் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 10 வருடத்திற்கு முன் அட்லியின் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ராஜா ராணி படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக நடித்த நடிகர் ஜெய் தான் நயன் 75 படத்திலும் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.

ராஜா ராணி படத்தில் இந்த ஜோடியை விரும்பி ரசித்தார்கள். இந்த எவர்கிரீன் ஜோடி 10 வருடத்திற்குப் பின் மறுபடியும் இணைகிறது என்ற தகவலை அறிந்ததும் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டாடி வருகின்றனர். மேலும் நயன் 75 படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்ல்லி ஆகியோரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த வருடமே நிறைவடைந்து இந்த ஆண்டின் இறுதியிலேயே படத்தை ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது.

இப்படம் குறித்த மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இதில் நயன்தாரா உடன் நடிக்க உள்ள ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இதற்கு முன்னர் ராஜா ராணி படத்திலும் இணைந்து பணியாற்றி இருந்தனர். அதோடு அப்படத்தை இயக்கியதும் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ தான். அப்படம் வேற லெவலில் வெற்றியை பெற்றது. அதேபோல் அந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எ திர் பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *