சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி, சச்சின் என்ற ஒரு மகன் இருக்கிறான். பின்னர் அவர்கள் இருவரும் கருத் து வே று பாடு கா ரணமாக வி வா கர த் து பெற்று பிரிந்தனர்.
ரவீந்திரனும் ஏற்கனவே திருமணமாகி வி வாக ரத் தானவர். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். இவர்கள் திருமணம் எத்தனையோ ச ர் ச் சைகளை ஏற்படுத்தியிருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு தங்களின் ஒவ்வொரு அசைவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதி.
அந்த வகையில் திருமணத்துக்குப் பிறகு தனது மனைவி மகாலட்சுமியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய ரவீந்தர், இன்ஸ்டகிராமில் உ ரு க்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிறந்தநாள்… ஆம். இன்று என் மகாலக்ஷ்மிக்கு பிறந்தநாள். பிரம்மனின் மொத்த கற்பனையாய் எனக்கு விற்பனையானவள் என் மகாலக்ஷ்மி. வாழ்க்கைல அது இ ஷ் டத்துக்கு ஒன்னு வந்தாதான் அத அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. அந்த அதிர்ஷ்டம் தான் என் மகாலக்ஷ்மி.
ஒரு மனிதன் தான் பிறந்ததிலிருந்து எல்லா விஷேச நாட்களையும் கொண்டாடுவான். ஆனா அவன் பிறந்தத ஒரு விசேஷமா கொண்டாடுறது அவன் குடும்பம் தான். ஒரு கால கட்டத்துக்கு அப்புறம் அத கொண்டாடுறது அவனால உ ரு வாக்கப்பட்ட குடும்பம். அப்படி உன்னால உருவாக்கப்பட்ட குடும்பத்தோட ஒரு ஆளாதான் உன் பிறந்தநாள நா கொண்டாடுறேன்.
நம்ம வாழ்க்கைல நாம நிறைய பேர நேசிப்போம். அவங்க நம்மல நேசிக்கனும்னு எந்த அவசியமும் இ ல் ல. அவங்க நம்ம மேல மரியாதையாவும் அன்பாவும் தான் இருப்பாங்க. ஆனா நாம பல பேர நேசிக்க ம றந் து ருப்போம். அவங்க நம்மள அளவுக்கு அதிகமா நேசிக்குறவங்களா இருப்பாங்க. அப்படி ஒன்னு என் கண்ணுல தென்பட்டப்ப தான் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னே எனக்கு தோனுச்சு.
மகாலக்ஷ்மி.. காலைல இருந்து ஒரே யோசனை. உன் பிறந்தநாளுக்கு என்ன செய்யறதுனு. 12 மணிக்கு கேக் வெட்றது.. ஸ்வீட் குடுக்குறது… முதியோர் இல்லம்.. அனாதை இல்லம்ன்னு போய் சாப்பாடு போடுறது.. பிடிச்ச gift வாங்கி குடுக்குறது இப்படி எல்லாமே எப்பையுமே உனக்கு எல்லாரும் பண்றது தான். ஆனா எனக்கு உன்ன பிடிக்கும். அதனால எனக்கு பிடிச்ச ஒன்ன உனக்கு கொடுக்கனும்னு தோனுச்சு. அப்படி ஒரு விஷயம் தான் இந்த ‘மல்லிகை பூ’. நாம நம்ம தேவைக்கு எத வேணாலும் வாங்கிக்க முடியும்ற போது இந்த பூவ உனக்கு குடுக்குறதுக்கு ஒரே காரணம் தான்.
இந்த பூவிற்கு நிகர் ஏதுமி ல் ல.. என் மகாலக்ஷ்மிக்கு நிகரும் யாருமி ல் ல. என்னப் பொருத்த வரை இந்த பூ மிகப் பெரிய ஒரு gift. உனக்கு நா இன்னைக்கு குடுக்குறதுக்கு. மத்த பொருள நா வாங்கி குடுக்குறதுல இருக்குற அன்ப விட அன்பே உருவான இந்த பூவில் அதிகமா இருக்கு. So my humble gift இத வாங்கிக்கோ. இதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச எந்த பொருளையும் காசு குடுத்து நீ வாங்கிக்கலாம். ஆனா இந்த பூ என் வாழ்க்கைலயே முதன் முதலா ஒரு பொண்ணுக்கு நா வாங்கி குடுக்குற gift. அது உனக்குத் தான். I love you mahalakshmi, Happy birthday” எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு மகாலட்சுமி என்னிடம் எல்லாம் இருக்கிறது அம்மு… உனக்கு தெரியுமா, இந்த பூ எனக்கு மிகவும் விலையுயர்ந்த ஒன்று என்று, ஏனென்றால் உங்களால் யாருக்கும் எதையும் பரிசளிக்க முடியும். ஆனால் கணவன் மட்டுமே தன் மனைவிக்கு பூவை பரிசளிக்க முடியும்… இந்த பரிசுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.. எல்லாவற்றிற்கும் மேலாக, நீ இறைவன் கொடுத்த பரிசு எனக்கு…. லவ் யூ மை அம்மு” எனத் தெரிவித்திருந்தார்.