இவ்வளவு பெரிய மனசா அவருக்கு…!! KPY பாலாவிற்கு ரூ. 10 லட்சம் கொடுத்த ராகவா லாரன்ஸ்…!! என்ன காரணம் தெரியுமா…?

General News

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர். நடன இயக்குநராக அறிமுகமாகி, ரஜினி உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் பலருக்கும் நடனம் அமைத்தவர் லாரன்ஸ். படங்களில் அவ்வப்போது சின்னச் சின்ன தோற்றங்களில் நடித்த லாரன்ஸ் ‘மாஸ்’ என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ஸ்டைல் முனி, டான் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். இதில் இவர் இயக்கி நடித்த ‘முனி’ திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க நினைத்த லாரன்ஸ் ‘காஞ்சனா’ ‘காஞ்சனா 2’ ‘காஞ்சனா 3’ படங்களை எடுத்தார். இந்த பாகங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் அவர் நடித்த சில படங்கள் தோ ல் வி யை சந்தித்தது. இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ருத்ரன். இந்த திரைப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி இருக்கிறார்.

இந்த திரைப்படமானது வருகிற ஏப்ரல் 14 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக பிரபல இயக்குநர்களான லோகேஷ் கனகராஜூம், வெற்றி மாறனும் கலந்து கொண்டனர்.  ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். நாம் கேள்விப்பட்ட  விஷயங்களை தாண்டியும் பல நல்ல நல்ல செயல்களை ராகவா லாரன்ஸ் செய்து கொண்டு தான் இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் எளிய மக்களுக்கும், பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்தும் வருகிறார் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ருத்ரன் படத்தின் இசை வெளியிட்ட விழாவிலும் அப்படியொரு விஷயத்தை செய்துள்ளார் லாரன்ஸ். ஆம், KPY பாலாவிடம் ரூ. 10 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். விஜய் டிவியில் உள்ள ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருபவர் பாலா.

குறிப்பாக ’குக் வித் கோ மா ளி’ நிகழ்ச்சியில் அவருடைய கா மெடி ரசிகர்களை க வர்ந்தது என்பதும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி, தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுகளை கூட அவர் குழந்தைகள் கா ப்பகத்திற்கு தான் கொடுத்ததாக கூறியிருந்தார். பாலாவிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ரூ. 10 லட்சம் தொகையை அவருக்கு வழங்கியுள்ளார். இதனால் மேடையிலேயே பாலா மிகவும் நெகிழ்ந்து போனார். ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *