டிஸ்னி+ ஹாட் ஸ்டார் கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 வெளியீட்டுத் தேதியை, ஒரு அழகான புரோமோ வீடியோ மூலம் அறிவித்துள்ளது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் முதலில் ஒளிபரப்பப்பட்ட ‘கனா காணும் காலங்கள்’ தொடர், பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி ஒளிபரப்பான தொடராகும். 2006 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளை தந்த தமிழ் தொடர் “கனா காணும் காலங்கள். இந்த தொடர் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்பட்ட, ஒரு கிளாசிக் தொடராகும்.
தமிழ் திரையில் பல சாதனைகள் படைத்திட்ட கனா காணும் காலங்கள் தொடர் புத்தம் புது பொலிவுடன், புது அத்தியாயங்களுடன், புதிய நட்சத்திர பட்டாளத்துடன் கடந்த ஆண்டு ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. இதில் நடிகர்கள் ராஜேஷ், பரத், நடிகை வி.ஜே.சங்கீதா மேலும் பலர் நடித்து இருந்தனர். அப்போது இந்த வெப் சீரியல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்ட இந்த பிரபலமான நிகழ்ச்சி, கடந்த ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸாக புதிய அவதாரத்தில் மீண்டும் வந்தது.
புதிய நடிகர்கள் மற்றும் நவீனக் கால கதைக்களத்தில் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருந்த இந்த சீரிஸ், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனுடைய முதல் பகுதி கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 , வரும் ஏப்ரல் 21 முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. சீசன் 1 முடிவடைந்த இடத்திலிருந்து இரண்டாவது சீசன் தொடர்கிறது.
இந்த புதிய சீசனில் சிறகுகள் மாணவர்களிடமிருந்து காதல், சந்தோஷம், ஏ க்கம், என அத்தனை உணர்வுகளையும் ரகிகர்கள் இரண்டு மடங்காகப் பெறுவார்கள்.டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 வெளியீட்டுத் தேதியை, ஒரு அழகான புரமோ வீடியோ மூலம் அறிவித்துள்ளது. இதோ அந்த வீடியோ…
Podra Vediya Coz We are back!? #KanaKaanumKaalangalSeason2 Streaming From April 21#ReturnofKanaa #DisneyPlusHotstar pic.twitter.com/3o8XfFocMf
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) April 10, 2023