ரசிகர்களை பிரம்மிக்க வைத்து வாயைப்பி ள க்க வைக்கும் அளவிற்கு தனது சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் நடிகை நயன்தாரா..?? அப்படி எவ்வளவு சொத்துக்கள் வைத்துள்ளார் தெரியுமா..?? தெரிந்தால் நீங்களும் ஷா க் ஆகிடுவீங்க..!!

Cinema News Image News

பிரபல தென்னிந்திய சினிமாவில் தற்போதைய லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நயன்தாரா. இவர் 2005 -ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான “ஐயா” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நயன்தாரா தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஓரிரு ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த 3 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு சமீபத்தில் உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வேக் என் சிவன் என்று பெயர் சூட்டியிருந்தனர்.

சமீபத்தில் தனது மகன்களின் புகைப்படங்களை தம்பதிகள் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் தள்ளினர். தற்போது நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி பரவி வருகின்றது. தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளாராம். நடிகை நயன்தாரா ஜவான் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தனது ஒவ்வொரு படத்திற்கும் தனது சம்பளத்தினை அதிகரித்து வரும் இவர், சுமார்5 முதல் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவருவதுடன், தனியார் ஜெட் விமானம் ஒன்றினையும் வைத்துள்ளார்.

நயன்தாரா பிம்.எம்.டபிள்யூ 5எஸ் (BMW 5s) சீரிஸ், மெர்சிடஸ் ஜி.எல்.எஸ் 350டி (Mercedes GLS 350 D), ஃபோர்டு எண்டெவர், பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 series), இன்னோவா கிரிஸ்ட்டா என 5 கோடிகள் மதிப்புள்ள சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறாராம். மேலும் இவருக்கு மும்பை, கேரளா, ஹைதராபாத் போன்ற இடங்களில் அபார்ட்மெண்ட் இருப்பதாகவும், சென்னையில் தனி வீடு ஒன்றினையும் வைத்துள்ளதுடன், சொந்தமாக ஸ்கின்கேர் நிறுவனம் ஒன்றினை தனது நண்பருடன் கடந்த 2021ம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகின்றார்.

இதுமட்டுமின்றி தேநீர் விற்பனை நிறுவனத்தின் ஒரு பகுதியையும் இவர் வாங்கியுள்ளதாகவும், விக்கியுடன் படத்தினை தயாரித்து வரும் இவர், 50 கோடி மதிப்புள்ள தயாரிப்பு நிறுவனத்தினையும் வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நயன்தாராவின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதில் இவருக்கு ரூபாய் 200 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *